ஊழல் எதிர்ப்புச் சட்டத்தினால் அண்மைகாலமாக நாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன - ரங்க திஸாநாயக்க!

14 Aug, 2026 | 12:44 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அதிகாரத்தில் உள்ள தரப்பினரே தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி இலஞ்ச ஊழல் எனும் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அந்த குற்றத்தால் தான் இலங்கை பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையடைந்தது. ஊழல் எதிர்ப்புச் சட்டத்தினால் அண்மைகாலமாக நாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்தார்.

ஊழல் எதிர்ப்பு சட்டத்திருத்தம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்துக் கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை வங்குரோத்து நிலையடைவதற்கு ஊழல் மோசடி பிரதான காரணம் என்று உயர்நீதிமன்றம் ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளது. பொருளாதார வங்குரோத்துக்கு யார் காரணம் என்றும் நீதிமன்றம் பெயர் குறிப்பிட்டுள்ளது. பொருளாதார பாதிப்பினால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதிகாரத்தில் உள்ள தரப்பினரே தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி இலஞ்ச ஊழல் எனும் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அந்த குற்றத்தால் தான் இலங்கை பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையடைந்தது.ஊழல் எதிர்ப்புச் சட்டத்தினால் அண்மைகாலமாக நாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

2004 ஆம் ஆண்டு இலங்கை ஊழலுக்கு எதிரான சர்வதேச சமவாயத்தில் இணைந்துக் கொண்டது.இருப்பினும் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி வரை அந்த சமவாயத்துக்கு அமைவாக உரிய சட்டம் இலங்கையில் இயற்றப்படவில்லை. 2023 ஆம் ஆண்டு பாரிய போராட்டத்துக்கு மத்தியில் புதிய விடயங்கள் பலவற்றை உள்ளடக்கிய வகையில் 'ஊழல் எதிர்ப்புச் சட்டம்' இயற்றப்பட்டது.

 நடைமுறையில் உள்ள ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை அமுல்படுத்தும் போது எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளை சுட்டிக்காட்டி திருத்தங்களை கொண்டு வருமாறு வலியுறுத்தினோம். ஆணைக்குழு சுயாதீனமாகவே செயற்படுகிறது. ஏதேனும் திருத்தங்களை முன்னெடுக்க வேண்டுமாயின் ஜனாதிபதி ஊடாகவே அமைச்சரவைக்கு அறிவிக்க முடியும்.

ஊழலற்ற நாடுகள் தொடர்பில் மக்கள் வெளிப்படையாக பேசுகிறார்கள். ஆனால் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் போது அரசியல் தரப்பினர் அதனை அரசியல் பழவாங்கல்  என்று குறிப்பிடுகிறார்கள். ஊழலற்ற நாட்டை உருவாக்க வேண்டுமாயின் சட்டங்களை இயற்றினால் மாத்திரம் போதாது, அதனை கடுமையான முறையில் செயற்படுத்த வேண்டும்.

ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அந்த நடவடிக்கைகளை மேலும் வினைத்திறனாக்குவதற்காகவே புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10