அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை!

14 Aug, 2026 | 01:03 PM
image

அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் 3 சிறைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

டென்னசி, அலபாமா மற்றும் ஓக்லஹோமா ஆகிய மாகாணங்களிலும் இந்த மூன்று குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட அந்தோணி டேரல் (வயது 66), கார்லோஸ் (வயது 70), ஜெரமி வில்லியம்ஸ் (வயது 42) ஆகிய மூன்று பேருமே கொலை வழக்குகளில் குற்றவாளிகளாக நீதிமன்றங்களால் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் ஆவர்.

ஹோட்டல் ஊழியர் ஒருவர கொலை செய்த குற்றத்துக்காக அந்தோணி டேரலும், காதலியை சுட்டுக்கொன்ற காரணத்தினால் கார்லோஸும், 5 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி கொலை செய்த குற்றத்துக்காக ஜெரமி வில்லியம்ஸும் மரண தண்டனையை பெறவுள்ளனர். 

முன்பு 2010 ஜனவரி 7ஆம் திகதி அமெரிக்காவில் ஒரே நாளில் மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பிறகு 16 ஆண்டுகள் கழித்து மேற்குறிப்பிட்ட மூன்று பேருக்கும் இந்த ஆண்டு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்படவிருக்கிறது. 

இக்குற்றவாளிகளுக்கு ஊசி மூலம் விஷம் உடலினுள் செலுத்தப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டெல்லியில் 06 மாடி விடுதி கட்டிடம்...

2026-09-06 17:39:48
news-image

ஆற்றை தனியாளாக சுத்தம் செய்தவருக்கு சர்வதேச...

2026-09-06 16:44:38
news-image

நேபாளத்தில் மண்ணில் புதைந்த வீட்டிலிருந்து 10...

2026-09-06 14:57:08
news-image

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உலக அழகு...

2026-09-06 14:17:08
news-image

எவரெஸ்ட் பனிப்பாறைகள் உருகுவதற்கு மனித சிறுநீரும்...

2026-09-06 12:19:21
news-image

இந்தோனேசியாவில் அனக் கிரக்கடோவா எரிமலை வெடிப்பு:...

2026-09-06 12:14:20
news-image

அமெரிக்கா - ஈரான் இடையிலான பரஸ்பர...

2026-09-06 09:44:38
news-image

தேசிய ஆசிரியர் தினம் : ஆசிரியர்களுக்கு...

2026-09-05 16:54:34
news-image

ஆப்பிரிக்க கண்டத்தின் அளவை துல்லியமாக காட்டும்...

2026-09-05 15:10:43
news-image

EOS-05 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது...

2026-09-05 14:18:16
news-image

கிழக்கு சீனாவில் மண்சரிவு: ஒருவர் பலி,...

2026-09-05 11:43:04
news-image

டெல்லியில் பெண் முதலமைச்சர், மத்திய அமைச்சர்...

2026-09-05 09:12:33