ஜப்பானில் கடும் மழை: நரிட்டா விமான நிலையத்தில் 7,000 பயணிகள் சிக்கித் தவிப்பு; 4 பேர் உயிரிழப்பு!

Published By: P. Saranya

14 Aug, 2026 | 12:35 PM
image

ஜப்பானின் சிபா மாகாணத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, டோக்கியோவின் நரிட்டா சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 7,000 பயணிகள் சிக்கித் தவிப்பதுடன், குறைந்தது நால்வர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானின் முக்கிய விடுமுறைக் காலத்தில் ஏற்பட்டுள்ள இந்த வெள்ளப்பெருக்கால் வீதிகள் மற்றும் புகையிரதப் பாதைகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்து மற்றும் மின்சார விநியோகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சிபா மாகாணத்தின் சில பகுதிகளில் 24 மணி நேரத்தில் 360 மில்லிமீற்றருக்கும் அதகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய வாகனத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தமை உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மீட்புப் பணிகளில் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டோக்கியோ எலெக்ட்ரிக் பவர் நிறுவனத்தின் தரவுகளின்படி, இன்று (14) காலை வரை 22,000க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளன.

வீதிகள் மற்றும் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டதால் நரிட்டா விமான நிலையத்தில் சுமார் 7,000 பயணிகள் சிக்கியுள்ளனர். அவர்கள் இரவு முழுவதும் விமான நிலைய முனையங்களில் தங்கியிருந்ததுடன், விமான நிலைய ஊழியர்களால் போர்வைகள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

நிலைமை சீரடைந்து வருவதால் விமான சேவைகள் வழக்கம்போல் இயங்கும் என விமான நிலைய ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைகள் மூடப்பட்டதாலும், புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டதாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள போதிலும், டோக்கியோவை நரிட்டாவுடன் இணைக்கும் சில புகையிரத சேவைகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிபா மாகாண ஆளுநர் தோஷிஹிட்டோ குமாகாய், நிலைமை தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிலியில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ...

2026-09-14 10:37:10
news-image

போரிஸ் ஜோன்சன் உட்பட ஐரோப்பிய அதிகாரிகள்...

2026-09-14 10:59:57
news-image

ஜாவா கடலில் மாயமான இந்தோனேஷிய பயணிகள்...

2026-09-13 13:27:33
news-image

இந்தியப் பிரதமர் மோடி அளித்த இரவு...

2026-09-13 12:44:55
news-image

இந்தோனேஷியாவில் 243 பயணிகளுடன் சென்ற கப்பல்...

2026-09-13 11:02:52
news-image

லண்டன் கார் பந்தயத்தில் வரலாற்றுச் சந்திப்பு:...

2026-09-13 12:53:28
news-image

ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு திருக்குறள் பரிசளித்தார்...

2026-09-13 17:14:11
news-image

7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா சென்றார்...

2026-09-12 14:21:54
news-image

நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை...

2026-09-12 14:11:35
news-image

இலங்கைத் தமிழரான கம்சி குணரட்ணம் நோர்வே...

2026-09-12 12:26:55
news-image

இந்தோனேசியா ஜகார்த்தாவில் பூமியதிர்ச்சி - பொதுமக்களுக்கு...

2026-09-12 11:09:01
news-image

பிலிப்பைன்ஸில் படகு தீப்பற்றி எரிந்து விபத்து...

2026-09-12 10:36:07