வயது அதிகரிப்பதற்காக அவசரப்பட்டு திருமணம் செய்யக் கூடாது: சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா கருத்து!

14 Aug, 2026 | 12:14 PM
image

முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர், திருமணம் மற்றும் இன்றைய தலைமுறையினரின் உறவுகள் குறித்து ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தனது தந்தையைப் போல கிரிக்கெட் துறையில் ஈடுபடாமல், நவீன வாழ்க்கை முறை மற்றும் ஃபேஷன் சார்ந்த செயல்பாடுகள் மூலம் சாரா டெண்டுல்கர் பொதுமக்கள் மத்தியில் தனக்கென ஒரு கவனத்தைப் பெற்றுள்ளார். மும்பையிலுள்ள திருபாய் அம்பானி சர்வதேசப் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை நிறைவு செய்த அவர், பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் திருமணம் குறித்துப் பேசியுள்ளார். அதில், வெறும் வயது அதிகரித்து வருகின்றது என்பதைக் காரணியாகக் கொண்டு எவரும் அவசரப்பட்டுத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்றைய 'Gen Z' தலைமுறையினர் காதல் மற்றும் உறவுகளை முந்தைய தலைமுறையினரை விட முற்றிலும் வித்தியாசமான முறையிலேயே அணுகுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, ஒரு பந்தத்தில் அல்லது உறவில் ஏதேனும் சரியாக அமையவில்லை என உணர்ந்தால், அதிலிருந்து துணிச்சலாக விலகுவதற்கு இளம் தலைமுறையினர் சிறிதும் தயங்குவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிலர் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வரும் கட்டத்தில் கூட, இருவருக்கும் இடையே ஒத்துப்போகவில்லை என்பதை உணர்ந்தால் திருமணத்திற்கு முன்பே பிரிந்து செல்லும் முடிவை தைரியமாக எடுக்கின்றனர் என்றும் சாரா விவரித்துள்ளார்.

இதனிடையே, சாராவின் சகோதரரான அர்ஜுன் டெண்டுல்கரின் திருமணம் அண்மையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து, சாராவின் திருமணம் எப்போது நடைபெறும் மற்றும் அவரது வருங்கால கணவர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்புகளும் கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டெல்லியில் 06 மாடி விடுதி கட்டிடம்...

2026-09-06 17:39:48
news-image

ஆற்றை தனியாளாக சுத்தம் செய்தவருக்கு சர்வதேச...

2026-09-06 16:44:38
news-image

நேபாளத்தில் மண்ணில் புதைந்த வீட்டிலிருந்து 10...

2026-09-06 14:57:08
news-image

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உலக அழகு...

2026-09-06 14:17:08
news-image

எவரெஸ்ட் பனிப்பாறைகள் உருகுவதற்கு மனித சிறுநீரும்...

2026-09-06 12:19:21
news-image

இந்தோனேசியாவில் அனக் கிரக்கடோவா எரிமலை வெடிப்பு:...

2026-09-06 12:14:20
news-image

அமெரிக்கா - ஈரான் இடையிலான பரஸ்பர...

2026-09-06 09:44:38
news-image

தேசிய ஆசிரியர் தினம் : ஆசிரியர்களுக்கு...

2026-09-05 16:54:34
news-image

ஆப்பிரிக்க கண்டத்தின் அளவை துல்லியமாக காட்டும்...

2026-09-05 15:10:43
news-image

EOS-05 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது...

2026-09-05 14:18:16
news-image

கிழக்கு சீனாவில் மண்சரிவு: ஒருவர் பலி,...

2026-09-05 11:43:04
news-image

டெல்லியில் பெண் முதலமைச்சர், மத்திய அமைச்சர்...

2026-09-05 09:12:33