சிறப்பு மிக்க தனது பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ள Citizens Development Business Finance PLC (CDB), அண்மையில் நடைபெற்ற தேசிய வர்த்தக சிறப்பு (National Business Excellence) விருதுகள் 2026 நிகழ்வில் வெள்ளி விருதை வென்றுள்ளது.
இந்த முக்கிய அங்கீகாரம் வழங்கப்படுவது, இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் தொடர்ந்து சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் வணிக நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் CDB இன் உயரிய நிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன், வங்கி சாரா நிதிச் சேவைகள் துறையில் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக வெற்றியாளராகவும், மிகப் பெரிய நிறுவனங்களுக்கான பிரிவில் இரண்டாம் இடத்தையும் (First Runner Up) CDB வென்றுள்ளது.
இவ்விருதுகள் அனைத்தும், வணிகச் சிறப்பில் CDB இன் ஆற்றல்மிக்க தலைமையையும், அதேவேளையில் புத்தாக்கம், நிலைத்தன்மை மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் அதற்கு இருக்கும் முழுமையான அர்ப்பணிப்பையும் பறைசாற்றுகின்றன.
"இந்தச் சாதனையை முன்னிட்டு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்," என்று பிரதி பிரதம நிறைவேற்றதிகாரி தமித் தென்னகோன் கூறினார். "CDB இன் பயணத்தில் இது மிக முக்கியமான மைல்கல்லாகும்; ஏனெனில், தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக நாங்கள் எங்கள் துறையில் முன்னணியில் திகழ்ந்து வருகிறோம்.
தலைமைத்துவம், நிர்வாகம் மற்றும் செயல்பாடு முதல் நிலைத்தன்மை வரையிலான வணிகச் சிறப்பின் அனைத்து பரிமாணங்களிலும் எங்கள் வலிமையை இந்த அங்கீகாரம் உறுதிப்படுத்துகிறது." இந்த விருது, எங்கள் குழுவினரின் மன உறுதியையும், பங்குதாரர்களின் நம்பிக்கையையும், "அத்துடன் இலங்கையில் டிஜிட்டல் மாற்றம் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான எங்கள் உறுதியையும்" பறைசாற்றுவதாக அமைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
புகழ்பெற்ற நடுவர் குழுவால் மதிப்பீடு செய்யப்படும் NBEA, ஏழு அளவுகோல்களின் அடிப்படையில் சிறந்து விளங்குவதை அங்கீகரிக்கிறது: தலைமைத்துவம், நிறுவன நிர்வாகம் மற்றும் உத்தி, திறன் மேம்பாடு, செயல்திறன் முகாமைத்துவம், உள்ளூர் மற்றும் உலகளாவிய சந்தை அணுகல், சுற்றுச்சூழல்-சமூக-நிர்வாகம் (ESG), மற்றும் வணிக மற்றும் நிதிசார் முடிவுகள்.
தொடர்ச்சியான ஆண்டுகளில், இந்த அளவுகோல்கள் அனைத்திலும் CDB சீரான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது; சவாலான சூழல்களிலும் கூட, தெளிவுடனும் தன்னம்பிக்கையுடனும் வெற்றி மகுடத்தைச் சூடிக்கொள்ளும் வகையில் அது முன்னோடியாகத் திகழ்கிறது.
Citizens Development Business Finance PLC (CDB) இலங்கையின் மிகப்பெரிய நான்கு வங்கிசாரா நிதி நிறுவனங்களுள் (NBFIs) ஒன்றாகத் திகழ்கிறது. CDB ஆனது நிதிச் சேவைகளில் அதன் புத்தாக்கம், நிலைத்தன்மை மீதான உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான நிறுவன நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றிற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மாற்றத்தில் கவனம் செலுத்தும் CDB, நிலையான மேம்பாட்டு இலக்குகளுடன் ஒத்துப்போகும் அதிநவீன தீர்வுகளை வழங்குவதன் மூலம் நிதிச் சேவைகள் துறையைத் தொடர்ந்து மறுவரையறை செய்து வருகிறது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM