கடந்த ஒரு மாதமாக குளத்திலேயே வாழும் 16 வயது சிறுவன் !

14 Aug, 2026 | 12:03 PM
image

இந்தியாவின் மேற்கு வங்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தனது உடலில் ஏற்படும் கடுமையான எரிச்சல் காரணமாக, கடந்த ஒரு மாதமாக பகல் மற்றும் இரவு நேரங்களைப் பெரும்பாலும் குளங்களிலேயே கழித்து வரும் விசித்திர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டம், பெல்டாங்கா பகுதியைச் சேர்ந்த இக்பால் என்ற 16 வயது சிறுவனே இவ்வாறு நீரில் முழ்கியபடி வாழ்ந்து வருகிறான். நீரிலிருந்து வெளியே வந்தவுடனே தனது உடல் முழுவதும் கடுமையான எரிச்சல் ஏற்படுவதாகவும், ஏதோவொரு அமானுஷ்ய சக்தி தன்னை ஆட்கொண்டது போன்று உணர்வதாகவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளான்.

இதன் காரணமாகவே சிறுவன் குளத்திலிருந்து வெளியேற மறுத்துத் தொடர்ந்து தண்ணீரிலேயே தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

உடல் பருமனாக இருக்கும் இக்பால், காலை முதல் இரவு வெகுநேரம் வரை குளங்களில் மிதந்தபடி காணப்படுகிறான். சில நேரங்களில் சிறுவன் ஒரு குளத்திலிருந்து மற்றொரு நீர்நிலைக்குச் செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சிறுவனின் இக்கட்டான நிலை குறித்து அவனது பெற்றோர் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர். சிறுவனை ஏற்கனவே வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தபோதிலும், அவனது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நீண்டகால சிகிச்சைக்கான செலவை தங்களால் ஈடுகட்ட முடியவில்லை என்றும், தனது மகனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க உதவுமாறும் அவர்கள் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீண்ட நாட்களாகத் தண்ணீரிலேயே இருந்து வருவதால் இக்பாலின் கை மற்றும் கால்களில் உள்ள தோல்கள் வெளிறிய நிலைக்கு மாறியுள்ள போதிலும், சிறுவன்  தண்ணீரை விட்டு வெளியே வரத் தொடர்ந்து மறுத்து வருகிறான்.

நீண்ட நேரம் தண்ணீரிலேயே இருப்பதால் தோலின்கீழ் பூஞ்சைத் தொற்றுகள் உள்ளிட்ட பல்வேறு தீவிரமான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனிடையே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இச்சிறுவனுக்கு விரைவாக உரிய உயர் வைத்திய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் இந்திய...

2026-09-11 15:07:46
news-image

9/11 பேரழிவு : அமெரிக்காவை உலுக்கிப்...

2026-09-11 14:47:24
news-image

மருத்துவ விடுப்பு கேட்ட இலங்கைத் தமிழரை...

2026-09-11 14:39:40
news-image

பட்டிமன்ற நடுவரும் தமிழ் இலக்கியவாதியுமான சாலமன்...

2026-09-11 14:13:15
news-image

நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் கார்...

2026-09-11 13:29:38
news-image

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பற்றாக்குறை: சிட்னி...

2026-09-11 16:57:18
news-image

நேபாள வெள்ளம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,377...

2026-09-11 17:04:22
news-image

இங்கிலாந்து புறப்பட்டார் விஜய்! ; தமிழக...

2026-09-11 12:14:33
news-image

போலிச் செய்தி எச்சரிக்கை: இந்தோனேஷியாவின் 'அனக்...

2026-09-11 11:29:24
news-image

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு...

2026-09-11 12:20:11
news-image

ஒன்ராறியோவின் முதலாவது செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுத்...

2026-09-11 09:43:58
news-image

வணிக வளாகம் மீது ரஷ்யா ட்ரோன்...

2026-09-11 09:32:56