கலம்போ எவ்.சி. - புளூ ஈக்ள்ஸ் இன்று சந்திக்கின்றன: சுப்பர் லீக் ஐந்தாம் கட்டம் ஆரம்பம்

14 Aug, 2026 | 11:55 AM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள பிரதான கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக்கின் ஐந்தாம்  கட்டப் போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு கலம்போ எவ்சிக்கும் புளூ ஈக்ள்ஸுக்கும் இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.

சுப்பர் லீக்கில் நான்காம் வார போட்டிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில் இதுவரை தோல்வி அடையாமல் இருக்கும் மூன்று அணிகளில் ஒன்றான கலம்போ எவ்சி இன்றைய போட்டியில் புளூ ஈக்ள்ஸிடம் கடும் சவாலை எதிர்கொள்ள  வாய்ப்புள்ளது.

தனது முதல் மூன்று போட்டிகளில் வெற்றிகளை சுவைத்த கலம்போ எவ்சி கடந்த வாரம் றினோன் கழகத்துடனான போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

இதற்கு அமைய அணிகள் நிலையில் கலம்போ எவ்சி 10  புள்ளிகளுடன்  3ஆம் இடத்தில் இருக்கிறது.

இதேவேளை, புளூ ஈக்ள்ஸ் கழகம் 2 வெற்றிகள், ஒரு வெற்றிதோல்வியற்ற முடிவு, ஒரு தோல்வி என்ற மாறுபாடான பெறுபேறுகளுடன் 7 புள்ளிகளுடன் நிகர கோல்கள் வித்தியாசத்திற்கு அமைய 5ஆம் இடத்தில் இருக்கிறது.

முதலிடத்தில் அப்கன்ட்றி லயன்ஸ்

நான்காம் வார போட்டி முடிவுகளுடன் நாவலப்பிட்டி அப்கன்ட்றி லயன்ஸ் கழகம் தனது 4 போட்டிகளிலும் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் முதலிடத்தில் இருக்கிறது.

இக் கழகம் 16 கோல்களைப் போட்டுள்ளதுடன் எதிராக 2 கோல்கள் மட்டுமே போடப்பட்டுள்ளது.

தோல்வி அடையாமல் இருக்கும் மற்றொரு கழகமான றினோன் 3 வெற்றிகள், ஒரு வெற்றி தோல்வியற்ற முடிவு என்ற பெறுபேறுகளுடன் 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

இக் கழகம் 16 கோல்களைப் புகுத்தி உள்ளதுடன் எதிரணிகளால் அவ்வணிக்கு எதிராக இதுவரை ஒரு கோல்தானும் போட முடியாமல் போயுள்ளது.

சீ ஹோக்ஸ் 7 புள்ளிகளுடன் 4ஆம் இடத்திலும் ரெட் ஸ்டார், புளூ ஸ்டார் ஆகிய இரண்டு கழகங் கள்   தலா 4 புள்ளிகளுடன் முறையே 6ஆம், 7ஆம் இடங்களிலும் இருக்கின்றன.

சுப்பர் லீக்கில், நியூ யங்ஸ் (2 புள்ளிகள்), டிபெண்டர்ஸ் (1), ரட்னம் (0) ஆகிய கழகங்கள் இதுவரை ஒரு வெற்றியைத் தானும் பெறவில்லை. இந்த மூன்று கழகங்களும் கடைநிலையில் இருக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோல்வியே காணாத அணிகள் மோதிய சுப்பர்...

2026-09-09 00:16:13
news-image

இமாம், ரிஸ்வான் தொடர்பான தகவல்கள் வெளியானதை...

2026-09-08 15:48:04
news-image

22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவது உறுதி –...

2026-09-07 21:29:19
news-image

தோல்வி அடையாத அணிகளான அப்கன்ட்றி லயன்ஸ்,...

2026-09-07 20:29:17
news-image

நியூ யங்ஸுக்கு எதிராக ஏகப்பட்ட கோல்களைத்...

2026-09-07 20:19:26
news-image

சுவிஸ் கராத்தே லீக்: இத்தோசுக்காய் கழக...

2026-09-07 16:25:36
news-image

சுப்பர் சிக்ஸுக்கு செல்ல சீ ஹோக்ஸ்...

2026-09-07 15:29:09
news-image

20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாணில்...

2026-09-07 13:12:09
news-image

ஹர்ஷித்தாவின் நிதானமான துடுப்பாட்டம் இலங்கையின் அரை...

2026-09-07 09:05:46
news-image

ரட்னம் கழகத்தை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ்...

2026-09-07 15:06:57
news-image

மத்தியஸ்தரின் தவறான தீர்ப்புகளுக்கு மத்தியில் டிபெண்டர்ஸ்...

2026-09-06 15:08:03
news-image

டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ருமேஷ்...

2026-09-06 10:39:58