செஞ்சோலை வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு முல்லைத்தீவில் உணர்வுபூர்வ அஞ்சலி!

14 Aug, 2026 | 10:51 AM
image

முல்லைத்தீவு-செஞ்சோலை வளாகத்தில் ஸ்ரீலங்கா இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த  மாணவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு வெள்ளிக்கிழமை (14) உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வான் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006.08.14 ஆம் திகதியன்று வள்ளிபுனம் – இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தில் விமானத்தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில் இந் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

முப்புர வட்டார புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் சி.குகனேசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த அஞ்சலி  நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,  புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே.கரிகாலன் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர்களான சி.குகனேசன் ,இ.கிரிதரன் , அ.சற்குணதாஸ், ஜீ.றாதிகா, மு.கஜேந்தினி, வ.சுதாகரன், த. தர்மலவன் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ச.ஜீவராசா, தாயக நினைவேந்தல் அமைப்பின் தலைவர் முல்லை ஈசன்,  இளைஞர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும்  கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நேபாள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13ஆம் நாள்...

2026-09-08 14:45:40
news-image

சக்தியின் கந்தன் திருக்கூடம்

2026-09-08 10:11:12
news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07
news-image

ஹொரவப்பத்தானையின் கல்வி முன்னோடிகளை கௌரவித்த ‘விழுதாகும்...

2026-09-04 19:25:27
news-image

கொழும்பு ஸ்ரீ ஹரே கிருஷ்ணா ஆலய...

2026-09-04 17:18:20
news-image

ஜப்பானில் 13-வது சர்வதேச வணிக மாநாடு:...

2026-09-04 14:03:14
news-image

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம்: ஏழு...

2026-09-04 10:42:58