இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது: மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் – தமிழ் நாட்டு முதலமைச்சர் விஜய்

Published By: P. Saranya

14 Aug, 2026 | 10:31 AM
image

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 09 இந்திய மீனவர்களையும், அவர்களின் படகையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்குத் தமிழ் நாட்டு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டின், இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 09 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகத் தெரிவித்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அவர்களின் விசைப்படகும் கைப்பற்றக்கட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் இத்தகைய தொடர் கைது நடவடிக்கைகள், அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் சீர்குலைப்பதாகக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை உடனடியாக மேற்கொண்டு, கைது செய்யப்பட்ட 09 மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகையும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மத்திய அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இப் பிரச்சினைக்கு நிரந்தர இராஜதந்திர தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துவருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிலியில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ...

2026-09-14 10:37:10
news-image

போரிஸ் ஜோன்சன் உட்பட ஐரோப்பிய அதிகாரிகள்...

2026-09-14 10:59:57
news-image

ஜாவா கடலில் மாயமான இந்தோனேஷிய பயணிகள்...

2026-09-13 13:27:33
news-image

இந்தியப் பிரதமர் மோடி அளித்த இரவு...

2026-09-13 12:44:55
news-image

இந்தோனேஷியாவில் 243 பயணிகளுடன் சென்ற கப்பல்...

2026-09-13 11:02:52
news-image

லண்டன் கார் பந்தயத்தில் வரலாற்றுச் சந்திப்பு:...

2026-09-13 12:53:28
news-image

ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு திருக்குறள் பரிசளித்தார்...

2026-09-13 17:14:11
news-image

7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா சென்றார்...

2026-09-12 14:21:54
news-image

நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை...

2026-09-12 14:11:35
news-image

இலங்கைத் தமிழரான கம்சி குணரட்ணம் நோர்வே...

2026-09-12 12:26:55
news-image

இந்தோனேசியா ஜகார்த்தாவில் பூமியதிர்ச்சி - பொதுமக்களுக்கு...

2026-09-12 11:09:01
news-image

பிலிப்பைன்ஸில் படகு தீப்பற்றி எரிந்து விபத்து...

2026-09-12 10:36:07