போதைப்பொருள் வியாபாரம் மூலம் சம்பாதித்த சொத்துக்கள் முடக்கம்: பெண் சந்தேகநபர் கைது!

14 Aug, 2026 | 09:46 AM
image

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட பணத்தைக் கொண்டு  சொத்துக்களைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் பெண் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேநபர் 53 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு 14, நகலசம் வீதியைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர், போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் ஈட்டிய பணத்தில் இச்சொத்துக்களைப் பெற்றுள்ளதாகக் பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த தகவலுக்கு அமையவே இவ்விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் நீதிமன்றத்தில் விபரங்களைச் சமர்ப்பித்ததை அடுத்து, சட்டவிரோதப் பணமாற்றத் தடுப்புச் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக அச்சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. நீர்கொழும்பு மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றங்களால் இதற்கான முடக்கக் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களில், ஜா-எல பகுதியில் அமைந்த 14 இலட்சம் ரூபா பெறுமதியான 8.66 பேர்ச்சஸ் காணி, 6 வங்கிப் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டிருந்த 59 இலட்சம் ரூபா பணம், கொழும்பு 14 பகுதியில் அமைந்துள்ள 225 இலட்சம் ரூபா பெறுமதியான 3 அறைகளைக் கொண்ட அடுக்குமாடி வீடு, அதே பகுதியில் அமைந்துள்ள 75 இலட்சம் ரூபா பெறுமதியான 1 அறையைக் கொண்ட அடுக்குமாடி வீடு மற்றும் 200 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று மாடி வீடு கொண்ட காணி ஆகியன அடங்குகின்றன.

மேலும், இச்சொத்துக்கள் அனைத்தும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டவை என்பது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த பெண் சந்தேகநபர் நேற்று வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பீடம்: நிதி...

2026-09-12 06:25:33
news-image

மகன் என்பதால் நாமல் ராஜபக்ஷவால் ஒருபோதும்...

2026-09-12 06:23:42
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தை திருக்கோவிலில்...

2026-09-12 06:13:45
news-image

மழையால் மின் உற்பத்திச் செலவு குறைவு:...

2026-09-12 06:11:26
news-image

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் ஷிரான்...

2026-09-12 06:07:38
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம்: கோரிக்கைகள்...

2026-09-12 03:13:43
news-image

200 ஆண்டுகளாக முகவரியின்றி வாழ்ந்த மலையக...

2026-09-11 14:21:54
news-image

செம்மணி குறித்து சர்வதேச விசாரணை கோரி...

2026-09-11 16:21:56
news-image

வெளிநாட்டுத் தொழிலாளர் இழப்பீடு 14 இலட்சம்...

2026-09-11 14:34:03
news-image

மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் அரசாங்கம்...

2026-09-11 15:21:22
news-image

முல்லைத்தீவில் குடிநீர் வழங்கல் தேவை 20...

2026-09-11 15:22:03
news-image

கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவுக்கு சுதந்திரத்துக்கான விருது

2026-09-11 17:33:04