2025 ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கும் 2026 ஆகஸ்ட் 12 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் 2,259 கிலோகிராம் 129 கிராம் ஹெரோயின், 2,653 கிலோகிராம் 245 கிராம் ஐஸ் போதைப்பொருள்ட்கள், 293 கிலோகிராம் 755 கிராம் கொக்கேய்ன் ஆகியவை அடங்கும்.
நீதிமன்ற நடவடிக்கைகள் பூர்த்தியடைந்த வழக்குகளுடன் தொடர்புடைய போதைப்பொருட்களே, புத்தளம் - வனத்தவில்லு பகுதியில் அமைந்துள்ள "லாட்டோ வத்தை" வளாகத்தில் உயர் வெப்பநிலை கழிவு எரிப்பானை பயன்படுத்தி அழிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் சம்பந்தப்பட்ட நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வந்ததையடுத்து, இதனை அகற்றுவதற்காக பின்பற்றப்படும் நிலையான நடைமுறைகளின் ஒரு பகுதியாகவே இந்த அழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM