உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை இன்று இலங்கை வெற்றிகொள்வது அவசியம்

14 Aug, 2026 | 09:18 AM
image

(நெவில் அன்தனி)

ஹொங் கொங் காய் டெக் ஸ்போர்ட்ஸ் அரினா உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் 14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் கிண்ணப் பிரிவுக்கான முதலாவது அரை இறுதிப் போட்டியில் நடப்பு ஆசிய சம்பியன் சிங்கப்பூரை நடப்பு உப சம்பியன் இலங்கை இன்று வெள்ளிக்கிழமை எதிர்த்தாடவுள்ளது.

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியானது. சிட்னி 2027 உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிக்கான ஆசிய தகுதிகாண் சுற்றாக அமைவதால் இந்தப் போட்டி இரண்டு அணிகளுக்கும் தீர்மானம் மிக்கப் போட்டியாக அமையவுள்ளது.

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் இரண்டு அணிகள் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

இந்நிலையில் இன்றைய போட்டியில் சிங்கப்பூரை இலங்கை வெற்றிகொண்டால் உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தில் விளையாட தகுதிபெறும்.

இதேவேளை இரண்டாவது அரை இறுதியில் மலெசியாவும் வரவேற்பு நாடான ஹொங்கொங்கும் விளையாடவுள்ளன. அதில் வெற்றிபெறும் அணியும் உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தில் விளையாட தகுதிபெறும்.

லீக் சுற்றில் இலங்கை வீராங்கனைகளில் சிலர் ஏகப்பட்ட தவறுகளை இழைத்ததால் சிங்கப்பூர் 62 - 51 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

அப் போட்டியில் இழைத்த தவறுகளைத் திருத்திக்கொண்டு மிக திறமையாக இலங்கை வீராங்கனைகள் விளையாடினால் வெற்றிபெறக்கூடியதாக இருக்கும்.

எவ்வாறாயினும் இலங்கையின் வெற்றி பயிற்றுநர் சொமித்தா டி அல்விஸின் கைகளிலேயே தங்கி இருக்கிறது.

சிங்கப்பூரின் பலம், பலவீனங்களை கவனத்தில் கொண்டு அதற்கேற்றவாறு வியூகங்களை அமைத்து சரியான வீராங்கனைகளை களம் இறக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் பயிற்றுநர் சொமித்தா டி அல்விஸ் உடையதாகும்.

லீக் சுற்றில் பந்து பரிமாற்றங்களில் ஏற்பட்ட தவறுகளை சிங்கப்பூருடனான போட்டியின்போது தவிர்த்துக்கொண்டு புத்திசாதுரியத்துடனும் சிறப்பான பந்து பரிமாற்றங்களுடனும் விளையாடினால் இலங்கையினால் வெற்றிபெறக்கூடியதாக இருக்கும். அத்துடன் உலகக் கிண்ணத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.

குறிப்பாக இலங்கை வலைபந்தாட்ட அணியின் முன்னாள் தலைவிகளான துலங்கி வன்னிதிலக்க, கயஞ்சலி அமரவன்ச, உப தலைவி தில்லின வத்தேகெதர ஆகியோர் பந்து பரிமாற்றங்களில் திறமையாக செயல்பட்டால் இலங்கைக்கு சாதகமான முடிவு கிடைக்கும்.

அதேவேளை, போட்டியின் ஒவ்வொரு கணத்தையும் பயிற்றுநரும் அணி முகாமைத்துவமும் நன்கு ஆய்வு செய்து அதற்கேற்ப மாற்று வீராங்கனைகளைக் களம் இறக்க வேண்டும்.

மேலும் சிங்கப்பூரை வெற்றிகொள்தாக இருந்தால் இலங்கை வீராங்கனைகள் அனைவரும் பொறுப்பணர்வு, கூட்டுமுயற்சி, நிதானம், சிறந்த வீயூகம் ஆகிய அனைத்தையும் ஒருங்கே பிரயோகித்து விளையாடவேண்டும். குறிப்பாக சிரேஷ்ட வீராங்கனைகள் முழுத் திறமையுடன் விளையாடுவது அவசியமாகும்.

அவர்களது எண்ணமெல்லாம் போட்டியில் வெற்றிபெற்று உலகக் கிண்ண வலைபந்தாட்டத்துக்கு இலங்கையைத் தகுதிபெறச் செய்வதாக இருக்கவேண்டும்.

லீக் சுற்றில் இலங்கையின் போட்டி முடிவுகள்

எதிர் ஹொங் கொங் 57 - 57 வெற்றிதோல்வி இல்லை

எதிர் சிங்கப்பூர் 51 - 62 தோல்வி

எதிர் மலேசியா 66 - 52 வெற்றி

எதிர் இந்தியா 100 - 34 வெற்றி

எதிர் மாலைதீவுகள் 78 - 33 வெற்றி

இலங்கை குழாம்

திசலா அல்கம (தலைவி), தில்லினி வத்தேகெதர (உப தலைவி), கயனி திசாநாயக்க, கயஞ்சலி அமரவன்ஷ, துலங்கி வன்னிதிலக்க, ரஷ்மி பெரேரா, மல்மி ஹெட்டிஆராச்சி, துமல்கா ஏக்கநாயக்க, பாஷி உடகெதர, சலனி நீஷா, திமி வசன்தப்ரிய, அஞ்லிக்கா திலக்கரட்ன. பயிற்றுநர்: சொமித்தா டி அல்விஸ். முகாமையாளர்: குமாரிஹாமி தென்னகோன், பிரதம செயற்பாட்டு அதிகாரி: தமயன்தி ஜயதிலக்க.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோல்வியே காணாத அணிகள் மோதிய சுப்பர்...

2026-09-09 00:16:13
news-image

இமாம், ரிஸ்வான் தொடர்பான தகவல்கள் வெளியானதை...

2026-09-08 15:48:04
news-image

22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவது உறுதி –...

2026-09-07 21:29:19
news-image

தோல்வி அடையாத அணிகளான அப்கன்ட்றி லயன்ஸ்,...

2026-09-07 20:29:17
news-image

நியூ யங்ஸுக்கு எதிராக ஏகப்பட்ட கோல்களைத்...

2026-09-07 20:19:26
news-image

சுவிஸ் கராத்தே லீக்: இத்தோசுக்காய் கழக...

2026-09-07 16:25:36
news-image

சுப்பர் சிக்ஸுக்கு செல்ல சீ ஹோக்ஸ்...

2026-09-07 15:29:09
news-image

20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாணில்...

2026-09-07 13:12:09
news-image

ஹர்ஷித்தாவின் நிதானமான துடுப்பாட்டம் இலங்கையின் அரை...

2026-09-07 09:05:46
news-image

ரட்னம் கழகத்தை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ்...

2026-09-07 15:06:57
news-image

மத்தியஸ்தரின் தவறான தீர்ப்புகளுக்கு மத்தியில் டிபெண்டர்ஸ்...

2026-09-06 15:08:03
news-image

டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ருமேஷ்...

2026-09-06 10:39:58