வத்தளை துப்பாக்கிச் சூடு ; இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற இரு சந்தேகநபர்கள் கட்டுநாயக்கவில் கைது!

14 Aug, 2026 | 09:28 AM
image

வத்தளையில் உணவகம் ஒன்றில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்வின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற இரு சந்தேகநபர்கள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கடந்த ஜூலை 23 ஆம் திகதி இரவு வத்தளையில் உள்ள உணவகம் ஒன்றில் நடைபெற்ற பிறந்தநாள் விருந்தின் போது துப்பாக்கிதாரிகள் பிறந்தநாள் விழாவிற்குள்  நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். 

இதனைத் தொடர்ந்து, சந்தேகநபர்கள் இருவரும் படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இவ்விருவரும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவர்கள் வருகை தருவதற்கு முன்னர், சென்னையில் இருந்து சந்தேகநபர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்புவது குறித்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையில் இருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு இந்திய அதிகாரிகள் தகவல் அளித்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட 30 மற்றும் 34 வயதுடைய இச்சந்தேகநபர்கள் வத்தளைப் பகுதியைச் சேர்ந்தவர்களாவர். 

விமான நிலையத்தை வந்தடைந்ததும், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவர்களிடம் முதற்கட்ட வாக்குமூலங்களைப் பதிவுசெய்த பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை அரசியல் களத்தில் சூடுபிடிக்கும் இரண்டு...

2026-09-11 16:31:59
news-image

இன்றைய வானிலை

2026-09-12 08:04:51
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பீடம்: நிதி...

2026-09-12 06:25:33
news-image

மகன் என்பதால் நாமல் ராஜபக்ஷவால் ஒருபோதும்...

2026-09-12 06:23:42
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தை திருக்கோவிலில்...

2026-09-12 06:13:45
news-image

மழையால் மின் உற்பத்திச் செலவு குறைவு:...

2026-09-12 06:11:26
news-image

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் ஷிரான்...

2026-09-12 06:07:38
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம்: கோரிக்கைகள்...

2026-09-12 03:13:43
news-image

200 ஆண்டுகளாக முகவரியின்றி வாழ்ந்த மலையக...

2026-09-11 14:21:54
news-image

செம்மணி குறித்து சர்வதேச விசாரணை கோரி...

2026-09-11 16:21:56
news-image

வெளிநாட்டுத் தொழிலாளர் இழப்பீடு 14 இலட்சம்...

2026-09-11 14:34:03
news-image

மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் அரசாங்கம்...

2026-09-11 15:21:22