எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக நாட்டின் சமுத்திர எல்லைக்கு ஏற்பட்டுள்ள சேதம் ஆராயப்பட வேண்டும் - பேராயர் வலியுறுத்தல்

Published By: Vishnu

14 Aug, 2026 | 06:44 AM
image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக நாட்டின் சமுத்திர எல்லைக்கு ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பாக அரசாங்கம் மேலும் ஆராய வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார்.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் இணைத் தலைமையில் கத்தோலிக்க சபையுடனான கலந்துரையாடல் வியாழக்கிழமை (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட கத்தோலிக்கப் பாடசாலைகளின் நிர்வாகச் சிக்கல்கள், கத்தோலிக்க மதத்திற்கான ஆசிரியர்கள் தொடர்பான பொறிமுறையினைத் தயாரித்தல், ஆசிரியர் தொழிலுக்காக கத்தோலிக்கத் கன்னியாஸ்திரிகளையும் அருட்தத்தைமார்களையும் உள்வாங்குவது குறித்த தற்போதைய முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல் என்பன இதன்போது இடம்பெற்றன.

மேலும், அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட பாடசாலைகளின் செயற்பாடுகள் தொடர்பாக கல்வி அமைச்சின் ஆதரவைப் பெறும் முறைமை பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

வருடத்திற்கு மூன்று தடவைகள் கத்தோலிக்க சபையுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படுவது தொடர்பில் கத்தோலிக்க சபை சார்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்திற்கு தமது நன்றியைத் தெரிவிப்பதாக இதன்போது கருத்துத் தெரிவித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக நாட்டின் சமுத்திர எல்லைக்கு ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பாக அரசாங்கம் மேலும் ஆராய வேண்டும் என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இங்கு தெரிவித்தார்.

எந்தவித பேதமுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் தங்களது மதத்தைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதே தமது அபிலாஷை என்றும், கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள நிலைமையை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தம்: ஜனாதிபதியின் கூற்றில்...

2026-09-08 14:55:10
news-image

2029இல் அநுர, குமார் குணரத்தினம், சீலரத்ன......

2026-09-08 15:49:13
news-image

அதிவேகமாக ஜனநாயகத்தை அழித்து வருகிறது அரசு...

2026-09-08 16:17:06
news-image

வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை...

2026-09-08 16:28:53
news-image

பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு 3 மாதங்களுக்கு...

2026-09-08 16:31:25
news-image

ஜனாதிபதியும் 159 உறுப்பினர்களும் மட்டுமே சுபீட்சமாக...

2026-09-08 16:48:21
news-image

ஆயுதமோதலின்போது இடம்பெற்ற மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை!...

2026-09-08 19:09:11
news-image

ஜனாதிபதியின் தலைமையில் அரச இலக்கிய விருது...

2026-09-08 21:31:51
news-image

சுருக்குவலை மீன்பிடிப் படகுகளுக்கான அனுமதிப்பத்திரம் ஒரே...

2026-09-08 18:00:08