கன்னியா வெந்நீரூற்று சிவன் ஆலய நித்திய பூஜை தடுத்து நிறுத்தப்பட்டது, ஆடி அமாவாசை தர்ப்பணத்திற்கு தொல்லியல் தினைக்களம் இடையூறு விளைவித்தமை இந்து மக்களிடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது என சர்வதேச இந்துமத பீட செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமசாந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று சிவன் கோவிலின் நித்திய பூஜைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதோடு ஆடி அமாவாசை தினத்தன்று தொல்லியல் திணைக்களம் பிதிர் தர்ப்பணத்திற்காக சென்றவர்கள் சிவன் ஆலயத்தை தரிசிப்பதற்கு சென்றவர்கள் அவர்களால் வெளியேற்றப்பட்டு பின்னர் வெளிநாட்டு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மூலம் அவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டு பல சிரமங்களுக்கு மத்தியில் கொடுக்கப்பட்டது.
இந்த செயற்பாடு இந்துக்களின் புனித நாளான ஆடி அமாவாசையில் மட்டுமல்ல சிவனை தரிசிப்பதற்கு தொல்லியல் திணைக்களம் ஏற்படுத்தும் இடையூறுகளால் இந்து மக்களிடையே ஒரு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சகல மதத்திற்கும் சமத்துவம் கொடுத்து கௌரவப்படுத்த வேண்டும் என அடிக்கடி கூறிவருகிறார். ஜனாதிபதியின் மத நல்லிணக்கத்திற்கு தொல்லியல் திணைக்களம் இடைஞ்சல் ஏற்படுத்தி வருகின்றது. ஆகவே ஜனாதிபதி இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுள்ளது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM