எதிர்வரும் காலத்தில் கஞ்சிபானை இம்ரான் கைது செய்யப்படுவார் - பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

Published By: Vishnu

14 Aug, 2026 | 06:04 AM
image

எதிர்வரும் காலங்களில் கஞ்சிப்பானை இம்ரான் நிச்சயம் கைது செய்யப்படுவார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எ.எஸ்.பி எப்.யூ.வூட்லர் கருத்து தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற விசேட ஊடகவிலாளர் சந்திப்பின்போது கஞ்சிப்பானை இம்ரான் கைதுச்செய்யப்படுவாரா என எழுப்பப்பட்ட ஊடகவியலாளர் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலையும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களையும் கட்டுப்படுத்துவதற்காக முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து முன்னெடுக்கும் கூட்டு நடவடிக்கைகள் தொடருகின்றன.

போதைப்பொருள் பறிமுதல் மற்றும் முக்கிய போதைப்பொருள் வலைப்பின்னல்களை இலக்குவைத்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன..

எதிர்வரும் காலங்களில் கஞ்சிப்பானை இம்ரான் நிச்சயம் கைது செய்யப்படுவார். போதைப்பொருட்கள் ஒழிப்பிற்கான சுற்றிவளைப்புக்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த அடிப்படையில் குற்றவாளிகள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவார்கள் நாட்டில் போதைப்பொருள் விநியோகத்தையும் பாவனையையும் முழுமையாக ஒழிப்பதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாகும். தகவல் வழங்குபவர்களின் விவரங்கள் பாதுகாப்பு நெறிமுறைகளின் கீழ் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10