நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் 'மொத ராத்திரி' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 2

13 Aug, 2026 | 05:44 PM
image

நடிகர் ரிஷிகாந்த் கதையின் நாயகனாக - மணமகனாக நடித்திருக்கும் 'மொத ராத்திரி' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா திருமண வைபவத்தை போல் சென்னையில் ஒரு திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மொத ராத்திரி' திரைப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில் குமார், சேத்தன், அப்துல் லீ, ஏ. வெங்கடேஷ், பக்ஸ் பகவதி பெருமாள், சங்கீதா கிருஷ், பானுப்பிரியா, வர்ஷினி, வேலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சுரேந்திரன் பரஞ்சோதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்திருக்கிறார். ரூரல் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி வை. ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், ரவிக்குமார் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் இயக்குநர் படத்தை பற்றி பேசுகையில், ''தமிழகத்தின் தென் பகுதியில் பெற்றோர்கள் நிச்சயித்த திருமணத்தின் சடங்கு- சம்பிரதாயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, மணமகன்- மணமகளுக்குள் ஏற்படும் பிரச்சனையும் ,அதன் தொடர்ச்சியும் தான் படத்தின் கதை.

இதனை அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசித்து, சிரித்து, கொண்டாடும் விதமாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.

இப்படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் ஏ வெங்கடேஷ் குறிப்பிடுகையில், 'இயக்குநர் ராஜா கருப்பசாமி மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜ் பாணியிலான் பாணியில் இப்படத்தை இயக்கியிருக்கிறார்' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் தக்ஷன் விஜய் நடிக்கும் 'துரோகம்...

2026-09-04 16:43:37
news-image

7 ஸ்டார் பாய்ஸ் - திரைப்பட...

2026-09-04 16:36:44
news-image

பெத்லகேம் குடும்ப யூனிட்- திரைப்பட விமர்சனம்

2026-09-04 16:07:24
news-image

ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த நயன்தாராவின்...

2026-09-03 16:22:12
news-image

இயக்குநர் மாரி செல்வராஜ் தொடங்கி வைத்த...

2026-09-03 16:21:45
news-image

உண்மை சம்பவங்களை தழுவி உருவாகியுள்ள 'பெத்லகேம்...

2026-09-03 16:14:49
news-image

தீபாவளி திருவிழாவில் வெளியாகும் பிரபுதேவா -...

2026-09-03 16:00:06
news-image

சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் திரிஷா

2026-09-03 15:57:17
news-image

நடிகர் கருணாஸ் நடிக்கும் 'என்ன விலை'...

2026-09-03 15:47:37
news-image

நடிகர் சூர்யா வெளியிட்ட கார்த்தி நடிக்கும்...

2026-09-02 17:19:54
news-image

புதுமுகங்களின் நடிப்பில் உருவான 'கோல்ட் கால்'...

2026-09-02 17:16:48
news-image

'ஐ அம் கேம் ஒரு தமிழ்...

2026-09-02 17:12:51