நாட்டுக்காக 22ஆவது திருத்தத்தை கைவிடுவது சிறந்தது என ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம் - ரஜீவ் அமரசூரிய 

13 Aug, 2026 | 05:44 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தால் உயர்நீதிமன்ற நீதியரசர்களும் பயனடைவார்கள். இந்த சட்டமூலம் சவாலுக்குட்படுத்தப்பட்டால் நீதியரசர்களும் நெருக்கடிக்குள்ளாகுவார்கள். இந்த தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் அல்லது சர்வஜன வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்துக்கமைய எடுக்க வேண்டும். நாட்டுக்காக 22ஆவது திருத்தத்தை கைவிடுவது சிறந்தது என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகளை இன்று (13) சந்தித்து அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி அவரது நிலைப்பாட்டை குறிப்பிட்டார். நாங்கள் எங்களின் நிலைப்பாட்டை குறிப்பிட்டோம்.

வெளிப்படையான மற்றும் விரிவான கலந்துரையாடல்கள் ஏதும் இல்லாமல் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை கொண்டுவருவதற்கு நாங்கள் எமது முழுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினோம். நாட்டின் நலனுக்காக இந்த திருத்தத்தை கொண்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தை தவிர தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில்  நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் தீர்மானத்துக்கு எதிர்மறையான கருத்துக்களே பதிவாகியுள்ளன. ஆகவே இதன் பாரதூரத்தன்மையை விளங்கி ஜனாதிபதி நாட்டுக்காக இந்தத் தீர்மானத்தைக் கைவிடவேண்டும்.

சகல பணிகளையும் பூர்த்தி செய்து வர்த்தமானி அறிவித்தலில் சட்டமூலத்தை வெளியிட்டதன் பின்னரே ஜனாதிபதி எம்முடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.  22ஆம் திருத்தத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளோம். நீதிமன்றத்தின் ஊடாக இதற்கு ஒரு தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தால் உயர்நீதிமன்ற நீதியரசர்களும் பயனடைவார்கள். இந்த சட்டமூலம் சவாலுக்குட்படுத்தப்பட்டால் நீதியரசர்களும் நெருக்கடிக்குள்ளாகுவார்கள். ஒன்றில் இந்த தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும். அல்லது நீதிமன்றத்துக்கு செல்லாமல்  சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்த ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்துடன் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தம்: ஜனாதிபதியின் கூற்றில்...

2026-09-08 14:55:10
news-image

2029இல் அநுர, குமார் குணரத்தினம், சீலரத்ன......

2026-09-08 15:49:13
news-image

அதிவேகமாக ஜனநாயகத்தை அழித்து வருகிறது அரசு...

2026-09-08 16:17:06
news-image

வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை...

2026-09-08 16:28:53
news-image

பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு 3 மாதங்களுக்கு...

2026-09-08 16:31:25
news-image

ஜனாதிபதியும் 159 உறுப்பினர்களும் மட்டுமே சுபீட்சமாக...

2026-09-08 16:48:21
news-image

ஆயுதமோதலின்போது இடம்பெற்ற மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை!...

2026-09-08 19:09:11
news-image

ஜனாதிபதியின் தலைமையில் அரச இலக்கிய விருது...

2026-09-08 21:31:51
news-image

சுருக்குவலை மீன்பிடிப் படகுகளுக்கான அனுமதிப்பத்திரம் ஒரே...

2026-09-08 18:00:08