RCGC இல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக CDB Monthly Medal போட்டி

Published By: Digital Desk 2

13 Aug, 2026 | 05:43 PM
image

Monthly Medal கூட்டாண்மையின் மூன்றாம் ஆண்டு, CDB Private Wealth நிறுவனத்திற்கு ஒரு சிறந்த தொடக்கப் புள்ளியாகும்.

இலங்கை, கொழும்பு 12 ஓகஸ்ட் 2026: Citizens Development Business Finance PLC (CDB), Royal Colombo Golf Club (RCGC) உடனான தனது வலுவான கூட்டாண்மையை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது; இதற்கமைய, RCGC இல் 2026 ஓகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் 'CDB Monthly Medal' போட்டியின் செப்டெம்பர் மாதப் பதிப்பு அறிவிக்கப்பட்டது.

இந்நிறுவனம் அதிக நிகர மதிப்புடைய தனிநபர்கள் மற்றும் வணிகத் தலைவர்களுக்காக அறிமுகப்படுத்தும் புதிய சேவையான 'CDB Private Wealth' இன் வெளியீட்டுடன், இந்த ஆண்டுக்கான நிகழ்வு இணைந்துள்ளது.

தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக நடைபெற்று வரும் Monthly Medal உடனான CDB இன் கூட்டு முயற்சியானது, வெறுமனே ஒரு கோல்ஃப் விளையாட்டு நிகழ்வு என்பதைத் தாண்டி விரிவடைந்துள்ளது.

இலங்கையின் வணிக மற்றும் தொழில்முறைச் சமூகத்தினரிடையே நீடித்த உறவுகளைக் கட்டியெழுப்புவதில் CDB கொண்டுள்ள பரந்த நோக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு சூழலில், RCGC உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஈடுபடுவதற்கான ஒரு தளத்தையும் இது வழங்குகிறது.

September Medal நிகழ்வானது, நிறுவனத்தின் வசதி படைத்த வாடிக்கையாளர் பிரிவினரைச் சூழலுக்குப் பொருத்தமான மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய ஒரு களத்திற்கு நேரடியாகச் சென்றடைய வாய்ப்பளிப்பதால், 'CDB Private Wealth' சேவையை அறிமுகப்படுத்துவதற்கு இது ஒரு மிகச் சிறந்த தளமாக அமைகிறது.

CDB Monthly Medal போட்டி 2026 செப்டெம்பர் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது; இதில் RCGC இன் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவைச் சேர்ந்த அங்கத்தவர்கள் பங்கேற்கலாம். இப்போட்டியின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்களுடனான தொடர்புகளை வளர்த்துக்கொள்ளுதலும்  மற்றும் விருந்தோம்பல் சார்ந்த நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. இதன் மூலம், இப்போட்டிக்கான தனது தொடர் அனுசரணையுடன் மேலதிகமாக, 'Private Wealth' சேவையை அங்கத்தவகளுக்கு நேரடியாக அறிமுகப்படுத்தும் வாய்ப்பும் CDB க்கு கிடைக்கும்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த  CDB இன் முகாமைத்துவ பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹேஷ் நாணயக்கார, Monthly Medal உடனான எங்களின் தொடர்ச்சியான கூட்டுமுயற்சி என்பது விளையாட்டைத் தாண்டிய ஒரு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது," என்று கூறினார்.

சிறப்பு, ஒழுக்கம் மற்றும் உறவுகளை மதிக்கும் ஒரு சமூகத்துடன் அர்த்தமுள்ள வகையில் இணைய இது ஒரு தளமாக அமைகிறது – இவை தான் 'CDB Private Wealth' ஐ வரையறுக்கும் விழுமியங்களாகும். RCGC உடனான எங்கள் மூன்றாம் ஆண்டில் இந்த முன்முயற்சியை அறிமுகப்படுத்துவது, விளையாட்டு மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இலங்கையின் வணிகச் சமூகத்துடன் உண்மையான மற்றும் நீடித்த உறவுகளை வளர்ப்பதற்கான எங்கள் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.” என்றார்.

Royal Colombo Golf Club இன் (RCGC) தலைவர் மஹேல ஜயவர்தன கூறியதாவது: "தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக RCGC உடன் முதன்மைப் பங்காளராக CDB இணைந்துள்ள நிலையில், அந்நிறுவனம் அளித்து வரும் உறுதியான ஆதரவானது, Monthly Medal போட்டி Club இன் நிகழ்வு அட்டவணையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக காணப்படுகின்றது. 

விளையாட்டைத் தாண்டி, இந்த கூட்டுமுயற்சி எங்கள் உறுப்பினர்களை ஒரு சமூக உணர்வுடன் ஒன்றிணைக்கிறது; மேலும், இந்த ஆண்டு 'CDB Private Wealth' அறிமுகப்படுத்தப்பட்டது போன்ற நடவடிக்கைகள் மூலம், இது பரந்த அளவிலான ஈடுபாட்டிற்கான ஒரு தளமாக வளர்ந்து வருவதைக் காண்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

Citizens Development Business Finance PLC (CDB) இலங்கையின் மிகப்பெரிய நான்கு வங்கி சாரா நிதி நிறுவனங்களுள் (NBFIs) ஒன்றாகத் திகழ்கிறது; அத்துடன் நிதிச் சேவைகளில் புதுமை, நிலைத்தன்மை மீதான உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான நிறுவன நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றிற்காக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் மாற்றத்தில் கவனம் செலுத்தி வரும் CDB, நிலையான மேம்பாட்டு இலக்குகளுக்கு ஏற்ப அதிநவீன தீர்வுகளை வழங்குவதன் மூலம் நிதிச் சேவைகள் துறையைத் தொடர்ந்து மறுவரையறை செய்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றிகரமாக நிறைவுற்ற ‘ProFood ProPack &...

2026-09-02 14:24:23
news-image

CCC Foundation நடத்தும் bikeathon நிகழ்ச்சியின்...

2026-08-27 12:24:37
news-image

2026 இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்டப் போட்டிகளுக்கு...

2026-08-22 12:33:59
news-image

NBEA 2026 இல் ஒட்டுமொத்த சிறப்புக்கான...

2026-08-14 12:00:47
news-image

இலங்கையின் முன்னணி உணவுத் துறை கண்காட்சியான...

2026-08-14 10:51:37
news-image

RCGC இல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக...

2026-08-13 17:43:14
news-image

2027 தேசிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக...

2026-08-09 17:16:46
news-image

காலியில் தனது புதிய மாபெரும் காட்சியறை...

2026-08-07 16:09:58
news-image

GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத்...

2026-08-05 16:33:53
news-image

கிரிக்கெட் திறமைகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் 'Dialog...

2026-08-04 17:03:02
news-image

இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை...

2026-08-03 14:55:49
news-image

ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை...

2026-08-03 14:46:29