(இராஜதுரை ஹஷான்)
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. எனது பாதுகாப்புக்கும் அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.இருப்பினும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது. இதனூடாக உயிரச்சுறுத்தல் இருப்பதையும் நான் அறிவேன். நாட்டு மக்களுக்காக சவால்களை ஏற்பதற்கு நான் தயாராகவே உள்ளேன். சவால்களுக்கு மத்தியில் பதவி விலக நேரிட்டால் அதனை மகிழ்வுடன் ஏற்று வெளியேற தயாராகவே உள்ளேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த சமூகமும் நீதி மற்றும் நியாயத்தை தேடும் வழக்கு இது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளின் காரணமாகவே வெற்றிடங்களுக்கு நியமனங்களை வழங்குவது தாமதப்படுத்தப்பட்டது. குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான வழக்கு விசாரணையின் தீர்ப்பு வெகுவிரைவில் வெளிவரும். நீதியை தேடும் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பது எனது கடமையாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது,
சட்டத்தரணிகள் சங்கத்தின் செயற்பாடு நல்லதல்ல
இன்று (நேற்று முன்தினம்) பகல் கலந்துரையாடலுக்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில் காலையில் நீங்கள் (இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்) உங்களின் நிலைப்பாட்டை அறிக்கை ஊடாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். வெளிப்படையான மனதுடன் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ளவே நான் வந்தேன்.
பேச்சுவார்த்தையின் பின்னர் எதனையும் குறிப்பிடலாம், ஆனால் பேச்சுவார்த்தைக்கு முன்னர் அதன் உள்ளடக்கம், மற்றும் நோக்கம் பற்றி பேசுவது நல்லதல்ல என்று குறிப்பிட்டுக் கொள்கிறேன். அது வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு தடையேற்படுத்தும்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரின் கருத்துக்களை அவரது தனிப்பட்ட கருத்து என்று கருத போவதில்லை. சட்டத்தரணிகள் சமூகத்தின் நிலைப்பாடாகவே அவரது கருத்தை பார்க்கிறேன்.
அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டு செயற்பட போவதில்லை
நிறைவேற்று அதிகாரத்தையும், பெரும்பான்மை அதிகாரத்தையும் அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டு பயன்படுத்த போவதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அரசியலமைப்பு திருத்தங்களினால் ஏனைய ஜனாதிபதிகளும் செல்ல நேரிட்டது.நானும் செல்ல நேரிடும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
செல்வதற்கு நான் தயார். தொடர்ந்து பற்றிப் பிடித்துக் கொள்ளும் நோக்கத்துடன் நான் வரவில்லை.மாற்றத்தை ஏற்படுத்த சவால்களையும் ஏற்பதற்கு தயாராகவுள்ளேன். சவால்கள் ஊடாக மாற்றம் எப்போதும் ஏற்படும்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. எனது பாதுகாப்புக்கும் அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.இருப்பினும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது. இதனூடாக உயிரச்சுறுத்தல் இருப்பதையும் நான் அறிவேன்.
நாட்டு மக்களுக்காக சவால்களை ஏற்பதற்கு நான் தயாராகவே உள்ளேன். சவால்களுக்கு மத்தியில் பதவி விலக நேரிட்டால் அதனை மகிழ்வுடன் ஏற்று வெளியேற தயாராகவே உள்ளேன்.
நீதிமன்ற கட்டமைப்பில் ஏற்படுத்தப்படும் மாற்றம் ஒரு நபருக்கான சிறப்பு சலுகையாகவோ அல்லது அழுத்தமாகவோ அமையாது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணை உயிரச்சுறுத்தல் இருப்பதை அறிவேன்.
நீதிமன்ற கட்டமைப்பில் நிலவும் வெற்றிடங்களுக்கு இந்த மாதத்தக்குள் நியமனங்கள் வழங்கப்படும்.இதற்கு நிச்சயிக்கப்பட்ட ஒரு காரணம் உள்ளது. உதாரணமாக உயிரத்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தை குறிப்பிடலாம். 23 ஆயிரம் பேருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுளுள்ளது. 3000 சாட்சியாளர்கள் உள்ளார்கள்.
மேல் நீதிமன்றங்களில் உள்ள சிரேஸ்ட நீதிபதிகள் தான் மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு செல்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு தான் உள்ளது. இந்த வழக்கு விசாரணைகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
ஒட்டுமொத்த சமூகமும் நீதி மற்றும் நியாயத்தை தேடும் வழக்கு இது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளின் காரணமாகவே வெற்றிடங்களுக்கு நியமனங்களை வழங்குவது தாமதப்படுத்தப்பட்டது. குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான வழக்கு விசாரணையின் தீர்ப்பு வெகுவிரைவில் வெளிவரும்.
குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளை நெருக்கடிக்குள்ளாக்கி விட்டு நியமனங்களை வழங்கியிருக்கலாம். ஆனால் அது எனது நோக்கமல்ல, நீதியை தேடும் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பது எனது கடமையாகும்.
விசாரணை பிரிவுகளின் செயற்பாட்டை விரிவுப்படுத்தல்
இலஞ்ச ஊழல் தொடர்பான சகல விசாரணைகளையும் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு வர வேண்டிய நிலை காணப்படுகிறது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கிளை காரியாலயங்களை 24 மாவட்டங்களில் திறப்பதற்கும், 373 சேவையாளர்களை இணைத்துக் கொள்வதற்கும் உரிய நடவடிக்கைகளை அனுமதி வழங்கியுள்ளேன்.
பொலிஸ் சேவையில் மாற்றம்
பொலிஸ் சேவையில் 10,2000 பேருக்கான ஆளணி காணப்படுகின்ற நிலையில் தற்போது 72000 பேர் சேவையில் உள்ளார்கள். அவர்களில் 4000 பேர் சீருடையில்லாமல் சேவையில் ஈடுபடுகிறார்கள். 68000 பேர் தான் சீருடையுடன் சேவையில் ஈடுபடுகிறார்கள். இவர்களை கொண்டு தான் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.
பொலிஸ் சேவையில் உள்ளவர்கள் தான் கடமையின் போது அதிகளவில் உயிரிழக்கிறார்கள்.கடந்த ஆண்டு மாத்திரம் 1100 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையின் போது உயிரிழந்துள்ளார்கள். பொலிஸ் சேவைக்கு புதிதாக 10000 பேரை இணைத்துக் கொள்வதற்கும், அவர்களுக்கான வசதிகளை வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் ஊடாகவே வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தப்படும்.
சட்டமா அதிபர் திணைக்களத்தில் பிரச்சினை உள்ளது
சட்டமா அதிபர் திணைக்களத்தில் உண்மையில் பிரச்சினை உள்ளது. திறமையான அதிகாரிகள் சேவையை விட்டுச் செல்கிறார்கள். 50 பேரை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அனுமதியளித்துள்ளேன்.அவர்களுக்குரிய வசதிகளையும் அதிகரிக்க அனுமதி வழங்கியுள்ளேன்.
நீதிமன்ற கட்டமைப்பு மறுசீரமைப்பு
அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் நீதிமன்ற கட்டமைப்பின் மறுசீரமைப்புக்கு போதுமானதாக அமையும். உயர்நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க போவதில்லை. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அரசியலமைப்பின் விதிக்கமைய மாகாண மட்டத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் அமர்வுகளை முன்னெடுக்க முடியும். அதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 12 பிரதேசங்களில் புதிதாக மேல் நீதிமன்றங்களை உருவாக்குவதற்கும், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 120 ஆகவும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM