பிராந்­திய வல்­ல­மை­மிக்க நாடு­க­ளி­டையே ஸ்திரத்­தன்­மையை பாது­காத்தல் தொடர்பில் இலங்கை பின்­லாந்து ஆகிய நாடுகள் கூடிய கவனம் செலுத்­தி­யுள்­ளன. 

ஹெல்­சின்கி நகர பாது­காப்பு அமைச்சில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையி­லான குழுவி­ன­ருக்கும்  பின்­லாந்தின் பாது­காப்பு அமைச்சர் யுசி நினிஸ்­டொ­வுக்கும் இடை­யி­லான கலந்­து­ரை­யா­ட­லொன்று இடம்­பெற்­றது. 

இதன்­போது போராட்­டங்கள் மற்றும் பிரச்­சி­னை­களின் பங்­கா­ளி­க­ளாக அன்றி, ஸ்திரத்­தன்­மையின் பங்­கு­தா­ரர்­க­ளாக நின்று தமது நாடு­களின் தனித்­து­வத்­தினைப் பாது­காப்­ப தன் முக்­கி­யத்­துவம் தொடர்­பா­கவும்  இரு நாடு­க­ளி­னதும் இரா­ணு­வத்­தி­ன­ரது சம்­பி­ர­தா­ய­பூர்வ செய­லொ­ழுங்­குகள் தொடர்­பா­கவும் இதன்­போது கருத்­துக்கள் பரி­மா­றப்­பட்­டன.

இந்து சமுத்­திரப் பிராந்­திய அமைதி மற்றும் சுதந்­தி­ர­மான கப்பற் போக்­கு­வ­ரத்து என்­பன இலங்­கைக்கு முக்­கி­யத்­து­வ­மாகக் காணப்­ப­டு­வது போன்றே பின்­லாந்­துக்கு பால்டிக் சமுத்­திரப் பிராந்­தி­யத்தின் அமைதி முக்­கி­ய­மா­ன­தாகக் காணப்­ப­டு­கின்­ற­மை­யினால், பிராந்­திய வல்­ல­மை­மிக்க நாடு­க­ளி­டையே ஸ்திரத்­தன்மை மற்றும் அமை­தியின் அடிப்­ப­டையைப் பாது­காத்துக் கொள்ளும் முறை­மைகள் தொடர்­பா­கவும் இதன்­போது விரி­வாகக் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இலங்கை மற்றும் பின்­லாந்து ஆகிய இரு நாடு­களும் இரா­ணு­வ ­ரீ­தி­யாக சுயா­தீன நாடு கள் என்­பதால், உட்­புற மற்றும் வெளிப்­புற அச்­சு­றுத்­தல்­க­ளி­லி­ருந்து பாது­காப்புப் பெறும் மூலோ­பா­யங்கள் தொடர்­பா­கவும் கவனம் செலுத்­தப்­பட்­டது.

தெற்­கா­சி­யா­வுக்­கான பின்­லாந்து தூதுவர் ரூலி சுய்க்கனென் பாதுகாப்பு அமைச்சரின் விசேட ஆலோசகர் கலாநிதி யுஹா மார்டெ லிஸ் பாதுகாப்பு அமைச்சரின் இராணுவ ஆலோசகர் கர்ணல் பெத்தெரி யொகோ ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங் கேற்றமை குறிப்பிடத்தக்கது.