22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நீதித்துறை சுதந்திரத்தைப் கடுமையாகப் பாதிக்கும் - அஜித் பி.பெரேரா எம்.பி

Published By: Digital Desk 2

13 Aug, 2026 | 04:31 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது, நாட்டின் நீதித்துறை சுதந்திரத்தைப் கடுமையாகப் பாதிக்கும்.இது ஓய்வுபெறும் தருவாயில் உள்ள நீதிபதிகளுக்குச் சலுகை வழங்கும் ஒரு மறைமுக நடவடிக்கையாகவே அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  அஜித் பி. பெரேரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் வியாழக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

'நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் இந்த அரசியலமைப்புத் திருத்தத்துக்கு முப்பீட மகாநாயக்க தேரர்கள், கத்தோலிக்க திருச்சபை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், நீதிபதிகள் சங்கம் மற்றும் சர்வதேச அமைப்புகள் என அனைத்துத் தரப்பினரும் கடும் எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளனர்.

முப்பீட மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய உத்தியோகபூர்வ கடிதம் மூலம் இந்தத் திருத்தம் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் என்பது தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

நாட்டின் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் சுமார் 10 இலட்சம் வழக்குகளில் 95 சதவீதமானவை நீதிவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களிலேயே நிலுவையில் உள்ளன.

மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் உயர்த்துவதால் கிராமப்புற அல்லது மாவட்ட நீதிமன்றங்களில் வருட கணக்கில் இழுபறியில் இருக்கும் வழக்குகள் ஒருபோதும் விரைவுபடுத்தப்பட மாட்டாது. எனவே, வழக்குத் தாமதத்தைக் குறைப்பதே நோக்கம் என்ற அரசாங்கத்தின் கூற்று முற்றிலும் போலியானது.

வரும் டிசம்பர் மாதம் ஓய்வுபெறவுள்ள பிரதம நீதியரசரை இலக்கு வைத்தே அரசாங்கம் அவசர அவசரமாக இந்தத் திருத்தத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது.

ஓய்வுபெறும் தருவாயில் உள்ள ஒருவருக்குப் பதவி நீடிப்பு வழங்குவது உலகளாவிய ரீதியில் ஒரு சலுகையாகவே பார்க்கப்படுகிறது.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியும் ஜனாதிபதிக்கு நேரடியாகக் கடிதம் மூலம் கண்டிப்பு தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 107ஆவது உறுப்புரையில் மாற்றம் செய்வது மக்களின் இறையான்மை அதிகாரம் மற்றும் நீதிமன்ற அதிகாரத்துடன் தொடர்புடையது என்பதால், இதனை நிறைவேற்ற பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டும் போதாது; கட்டாயமாகச் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

எனவே, நீதிமன்றத்தின் சுயாதீனத்தைப் பாதுகாக்கும் வகையில், அரசியல்வாதிகள் அளிக்கும் இந்தச் சலுகையை நீதிபதிகள் ஏற்க மாட்டார்கள் என நம்புகிறோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10