ASUS இடமிருந்து AI-வலுவூட்டப்பட்ட பிரதான ExpertBook Ultra இலங்கையில் அறிமுகம், மேலும் வியாபாரங்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்த ExpertBook B மற்றும் P Series ஐ விரிவாக்கம் செய்துள்ளது

13 Aug, 2026 | 03:49 PM
image

நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் (CXOs) வர்த்தகத் தலைவர்களும் தங்களின் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தி, சிறப்பான செயல்பாடுகள் உருவாகும் அதிஉயர் மனநிலையை அடையும் வகையில் வடிவமைக்கப்பட்ட தொழில்துறையின் உச்சகட்ட அடையாளமும் Copilot+ PC-யுமான ASUS ExpertBook Ultra சாதனத்தை, ASUS இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இச்சாதனம் மிக லேசான வடிவமைப்பு, அதிநவீன AI இயங்குதிறன், தெளிவான காட்சித்திரை, ஆழ்ந்த ஒலி அனுபவம், நாள்முழுவதும் உழைக்கும் பற்றரி, இணையற்ற தட்டச்சு அனுபவம், முன்னணி இராணுவத் தரத் தாங்குதிறன், enterprise-தர பாதுகாப்பு, அதிசிறந்த வணிகச் சேவை ஆதரவு மற்றும் இலகுவான விரிவாக்க வசதிகளைக் கொண்டுள்ளது.

அத்துடன், இலங்கையிலுள்ள நிறுவனங்கள் மற்றும் வர்த்தகங்களின் தீவிரமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், உயர் செயல்திறன்மிக்க AI பணித்திறன் மற்றும் எதிர்காலத்திற்கான விரிவாக்க வசதிகளுடன் கூடிய B தொடர் (B3 மற்றும் B5 மாடல்கள்) மற்றும் P தொடர் கணினிகளையும் ASUS தனது ExpertBook பட்டியலில் இணைத்து விரிவுபடுத்தியுள்ளது.

அடுத்த தலைமுறை Intel® Core™ Ultra Series 3 செயலிகள் மற்றும் AI-சார்ந்த உற்பத்தித்திறனுடன் இயங்கும் இந்த புதிய ExpertBook Ultra, B மற்றும் P தொடர் வணிக மடிக் கணனிகள் அனைத்தும், ASUS நிறுவனத்தின் Worry-Free Business Experience என்ற உறுதியின்கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இவை உயர்மட்ட செயல்திறன், நிறுவன பாதுகாப்பு, இராணுவத் தர ஆயுள்காலம், விரிவான இணைப்பு வசதிகள் மற்றும் எளிதான பெயர்வுத்திறன் ஆகியவற்றை, இலங்கையின் மிகச் சிறந்த வர்த்தகச் சேவை ஆதரவு வலையமைப்போடு இணைத்து வழங்குகின்றன.

The Flagship: ASUS ExpertBook Ultra

இந்தத் துறையின் அல்டிமேட் Flagship மாதிரியாக ASUS ExpertBook Ultra அமைந்துள்ளது! Aerospace மற்றும் Formula 1 தொழில்நுட்பங்களில் பயன்படும் AZ31B மெக்னீசியம்-அலுமினியம் alloy கொண்டு நேர்த்தியாக உருவாக்கப்பட்ட இந்த ultra-portable flagship சாதனம், 9H hardness தரப்படுத்தலைக் கொண்ட Nano Ceramic surface ஐக் கொண்டுள்ளது. வினைத்திறன், நீடித்த பாவனை, அழகியல் மற்றும் பாவனையாளர் அனுபவம் ஆகியவற்றில் இதுவரை இல்லாத அளவிலான இணையற்ற சமநிலையை வழங்குவதற்காக இது பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பௌதீகவியலின் விதிகளை கடந்து, ExpertBook Ultra சாதனம், நவீன Intel® Core™ Ultra X9 (Series 3) புரொசஸர், சக்தி வாய்ந்த GPU, மேம்படுத்தப்பட்ட NPU (50 TOPS) மற்றும் ASUS ExpertCool Pro thermal தொழில்னுட்பம் ஆகியவற்றை ஒரே AI கம்ப்யூட்டிங் தளமாக ஒருங்கிணைக்கிறது. வெறும் 0.99 kg எடையிலும், 10.9 mm featherlight chassis, அதிக வேலை அழுத்தங்களின் போது 50W வரை நிலையான CPU வினைத்திறனை இது வழங்குகிறது.

அடுத்த தலைமுறை PCIe® Gen 5 storage மற்றும் அதிவேக LPDDR5X memory உடன் சேர்ந்து, இந்த Copilot+ PC ஒரு future-proof சாதனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ‘State of Brilliance’ எனும் மனநிலையை உருவாக்கி, தொழில்நுட்பத் தடைகளின்றி வியாபாரத் தலைவர்களுக்கு தமது தொலைநோக்குத் திட்டங்களை பூரணத் தெளிவோடு நிறைவேற்ற உதவுகிறது.

ExpertBook Ultra சாதனம், இணையற்ற காட்சி மற்றும் ஒலி அனுபவத்தையும் வழங்குகிறது. இதன் 14-அங்குல 3K 120Hz அன்டி-கிளேர் தொடுதிரை Tandem OLED திரை 1,400 nits வரை பிரகாசத்தை அடைவதுடன், வழக்கமான OLED திரைகளை விட மிகக் குறைந்த மின்சாரத்தை நுகர்ந்து, தத்ரூபமான காட்சியனுபவத்தையும் துடிப்பான வண்ணங்களையும் வெளிப்படுத்துகிறது. ஆறு ஸ்பீக்கர்களைக் கொண்ட Dolby Atmos® ஒலி அமைப்போடு இணைந்து, இணையவழிச் சந்திப்புகள், விளக்கக்காட்சிகள் மற்றும் நிறைவேற்றுசார் பணிப்போக்குகளுக்கு தெளிவான குரல் ஒலியுடன் கூடிய ஆழமான ஒலி அனுபவத்தை இணையாக வழங்குகிறது.

ஒத்துழைப்பை இலகுவாக்கவும், தகவல் தொடர்பை மேம்படுத்தவும், AI-சார்ந்த பணிப்போக்குகளை திறம்படப் பயன்படுத்தவும் உதவும் பல AI அம்சங்களின் மூலம் உற்பத்தித்திறன் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ASUS ExpertMeet, AI சத்தக் குறைப்பு, அறிவார்ந்த கமரா மேம்பாடுகள் மற்றும் ASUS MyExpert மூலமான அடுத்த தலைமுறை AI அனுபவங்களுக்கான ஆதரவு ஆகியவை இதில் அடங்கும்.

வெளிப்பயணங்களை மேற்கொண்டிருக்கும் தொழில்முறையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இது, நாள் முழுவதுமான பற்றரி ஆயுள், அதிவேக சார்ஜிங், Wi-Fi 7 மற்றும் Adapters அல்லது பிற பாகங்களை எதிர்பாராமல் நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய பலவிதமான portகளைக் கொண்டுள்ளது. மேலும், Biometric authentication, Microsoft Pluton இணைப்பு மற்றும் வன்பொருள் அளவிலான BIOS பாதுகாப்பு வசதிகளை வழங்கும் ASUS ExpertGuardian மூலமாக நிறுவனத் தரப் பாதுகாப்பு இதன் மையப் புள்ளியாக அமைந்துள்ளது.

தகர்க்க முடியாத பாதுகாப்பை எதிர்பார்க்கும் IT நிபுணர்கள், மிகச்சிறந்த கம்பீரத்தை விரும்பும் நிறுவனங்களின் உயர் நிறைவேற்று அதிகாரிகள், மற்றும் கணினி வன்பொருள் தங்களின் ஆற்றலுக்குத் தடையாக இருப்பதை விரும்பாத சுறுசுறுப்பான தொழில்முறையாளர்களுக்குமான ஒரே தெரிவு இதுவாகும்! ASUS ExpertBook Ultra என்பது ASUS Expert Series தொடரின் ஆகச்சிறந்த வெளிப்பாடாகும். IT நிபுணர்களால் நம்பப்பட்டது, கவலையற்ற வணிகத்திற்காக உருவாக்கப்பட்டது.

Mainstream AI Powerhouses: ExpertBook B மற்றும் P Series

இந்த flagship மாதிரியுடன் இணைந்து, அனைத்து அளவிலான நிறுவனங்களின் தேவைகளுக்கும் ஏற்ப பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள ExpertBook B மற்றும் P சீரிஸ் தெரிவுகளான ExpertBook P5, B5, P3 மற்றும் B3 ஆகியவை கணிசமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன. IT முடிவெடுப்பவர்களுக்கு சிறந்த தெரிவுக்கான சுதந்திரத்தை வழங்கும் வகையில், இந்த மாதிரிகள் 14-அங்குல மற்றும் 16-அங்குல display configurationகளில் பல்வேறு chassis optionகளுடன் வழங்கப்படுகின்றன.

மேம்பட்ட NPU திறன்களைக் (50 TOPS) கொண்ட Intel® Core™ Ultra Series 3 செயலிகளால் இயங்கும் இந்த பன்முகத்தன்மை கொண்ட ExpertBook AI கணினி மாதிரிகள், 64GB DDR5 RAM மற்றும் இரட்டை SSD storage அமைப்புகளுக்கான ஆதரவுடன் விரிவான விரிவாக்கத் திறனை வழங்குகின்றன.

வேகமாக வளர்ந்து வரும் ஒரு புதிய வர்த்தக முயற்சியாக அல்லது ஒரு சர்வதேச நிறுவனமாக இருப்பினும், ExpertBook B மற்றும் P தொடர்கள் அமெரிக்க இராணுவத் தரத் (MIL-STD 810H) தாங்குதிறன், ASUS ExpertGuardian பல அடுக்கு பாதுகாப்பு, இலவச 1 வருட McAfee™ + Premium சந்தா மற்றும் தொழில்துறையில் முன்னணியில் உள்ள சேவை வலையமைப்பு ஆகியவற்றின் துணையோடு நிலையான நம்பிக்கையூட்டும் வணிக அனுபவத்தை உறுதி செய்கின்றன. இது ExpertBook தொடரை நிறுவனப் பயன்பாட்டிற்கு மிகவும் பொருத்தமான, வலுவான தேர்வாக மாற்றுகிறது.

தகவல் தொழில்நுட்பத் துறையின் தீர்மானங்களை எடுப்போருக்கு ஆகச்சிறந்த தெரிவுக்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில், இந்த புதிய ExpertBook மாதிரிகள் 14-அங்குல மற்றும் 16-அங்குல திரை அமைப்புகளில் பலதரப்பட்ட Chassis தெரிவுகளுடன் வருகின்றன. பன்முகத்தன்மை கொண்ட இந்த AI ஆற்றல் மையங்கள், Intel® Core™ Ultra Series 3 வரையிலான பலதரப்பட்ட செயலித் தெரிவுகள், பேரமைவு கொண்ட GPU மற்றும் மேம்பட்ட NPU (50 TOPS) வசதிகளை உள்ளடக்கியுள்ளதுடன், 64GB DDR5 RAM மற்றும் இரட்டை SSD storage ஆதரவு மூலமாக விரிவான விரிவாக்கத் திறனையும் வழங்குகின்றன.

சிறந்த தயாரிப்புகளுக்கு இணையாக, முழுமையான ASUS ExpertBook தொடரும் இலங்கையின் மிக விரிவான வர்த்தகச் சேவை ஆதரவு வலையமைப்பினால் பலப்படுத்தப்பட்டு, உண்மையான நம்பிக்கையூட்டும் வணிக அனுபவத்தை வழங்குகிறது.

ASUS வணிகப் பயனர்கள் பிரத்தியேக உதவித்தொலைபேசி இலக்கம் (காலை 9 முதல் மாலை 6 மணி வரை, திங்கள்-சனி), நேரடியாக வந்து சேவை வழங்கும் வசதி, 90 நாடுகளில் செல்லுபடியாகும் இயல்பான 3 வருட சர்வதேச உத்தரவாதம், தயாரிப்பு உத்தரவாதத்திற்கு இணையான Adapter Warranty மற்றும் 5 வருடங்கள் வரையிலான நீட்டிக்கப்பட்ட சேவைத் தொகுப்புகளை (உத்தரவாத நீடிப்பு, அடுத்த வேலை நாள் சேவை ஆதரவு, உள்ளூர் எதிர்பாராத சேத பாதுகாப்பு மற்றும் பற்றரி உத்தரவாத நீடிப்பு) பெறுகின்றனர்.

அறிமுகம் தொடர்பில் ASUS APAC இன் வணிக பிசிகளின் தலைமை அதிகாரி ரெக்ஸ் லீ கருத்துத் தெரிவிக்கையில்,

“ASUS நிறுவனத்தில், எங்களது கண்டுபிடிப்புகள் அனைத்தும் 'வடிவமைப்புச் சிந்தனை' (Design Thinking) எனும் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவை; அதாவது, நவீன தொழில்முறையாளர்களின் தேவைகளுக்கு உன்னிப்பாகச் செவிசாய்த்து, தொழில்துறையிலுள்ள நிஜ உலக இடைவெளிகளை நிரப்புவதாகும்.

மிக இலகுவான பெயர்வுத்திறன், நிலையான செயல்திறன் மற்றும் நீண்ட பற்றரி ஆயுள் ஆகியவற்றுக்கு இடையே ஏதேனும் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு வணிகத் தலைவர்கள் தள்ளப்படுவதை நாங்கள் உணர்ந்தோம். இத்தகைய ஆழமான புரிதல்களின் அடிப்படையில், அந்த சமரசத்தை முற்றாக நீக்கி, நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்குப் புதியதொரு தரநிலையை அமைக்கும் வகையில் ExpertBook Ultra சாதனத்தை உருவாக்கியுள்ளோம்.

மேலும், இலங்கை AI தொழில்நுட்பத்திற்கு முதன்மையளிக்கும் புதிய காலகட்டத்தை நோக்கி விரைவுபடும் வேளையில், Intel® Core™ Ultra Series 3 செயலிகளால் இயங்கும் எங்களது புதிய வரிசையின் மூலம் Power of Choice ஐ வழங்குவதில் பெருமையடைகிறோம்.

எங்களது முதன்மை மாடலான Ultra முதல் பன்முகத்தன்மை கொண்ட ExpertBook B மற்றும் P தொடர்கள் வரை, பாதுகாப்பான மற்றும் தடையற்ற சாதன வழியிலான AI ஒருங்கிணைப்பிற்காக 50 TOPS வரையிலான உயர் செயல்திறன்மிக்க NPU-களுடன் இலங்கையின் நிறுவனங்களை வலுப்படுத்துவதே எங்களது நோக்கமாகும்.

அனைத்திற்கும் மேலாக, இந்த முழுத் தொடரும் எங்களின் நம்பிக்கையூட்டும் வணிகம் எனும் வாக்குறுதியை அடித்தளமாகக் கொண்டுள்ளது. இது இராணுவத் தரத் தாங்குதிறன், நிறுவனப் பாதுகாப்பு மற்றும் இலங்கையின் மிக விரிவான உள்ளூர் சேவை ஆதரவு வலையமைப்பு ஆகியவற்றை ஒன்றிணைத்து, வணிகங்கள் பூரண நம்பிக்கையுடன் தங்களின் எல்லையை விரிவுபடுத்த வழிவகுக்கிறது.” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

iPhone 18 Pro, Pro Max...

2026-10-10 12:46:26
news-image

விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டாடும்...

2026-10-05 13:40:58
news-image

இன்ஸ்டகிராம் பெண்களுக்கான செயலி - எலான்...

2026-10-02 12:55:01
news-image

AI மனிதகுலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற...

2026-09-21 16:36:41
news-image

ஸ்கொட்லாந்தில் மன்னர் சார்ள்ஸ் தலைமையில் ஏஐ...

2026-09-15 16:43:56
news-image

பெண்களின் கைகளுக்கு மெஹந்தி போடவும் இயந்திரம்...

2026-09-14 17:32:51
news-image

இந்தியாவில் கூகுளின் பிரம்மாண்ட 'அனந்தா' வளாகம்...

2026-09-12 14:40:40
news-image

iPhone 18 Pro, iPhone 18...

2026-09-10 11:16:58
news-image

ஆப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக...

2026-09-01 15:16:48
news-image

Gemini Omni: கூகுளின் மல்டிமாடல் ஏஐ...

2026-08-29 14:07:18
news-image

ASUS இடமிருந்து AI-வலுவூட்டப்பட்ட பிரதான ExpertBook...

2026-08-13 15:49:36
news-image

கணினி, கையடக்கத் தொலைபேசிகளின் வேகத்தை அதிகரிக்கும்...

2026-08-11 11:17:38