அரசியலமைப்பு திருத்தம் குறித்த நகர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் பல்வேறு பொய்ப் பிரசாரம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

13 Aug, 2026 | 03:48 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசியலமைப்பு திருத்தம் குறித்த நகர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் பல்வேறு பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்தச் சட்டமூலம் தொடர்பான எந்தவொரு திருத்தத்திற்கும் அரசாங்கம் தயாராகவே உள்ளது. அரசியலமைப்பிற்கு உட்பட்ட முறையில் முன்னெடுக்கப்படும் இந்தச் சீர்திருத்தங்களை எவர் வேண்டுமானாலும் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தலாம்; உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைய பாராளுமன்றம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

வியாழக்கிழமை (13) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நீதித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

நாட்டின் நீதிமன்றங்களில் பல வருடங்களாகத் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவுபடுத்தி மக்களுக்குச் விரைவாக நீதியைப் பெற்றுத் தருவதற்காகவே நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த 2024 ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களின் போது தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவுபடுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தோம். அந்த வகையில் நீதித் துறையில் முன்னெடுக்கப்படும் ஒட்டுமொத்த சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகவே சுமார் 400 நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 2 ஆண்டுகள் உயர்த்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது ஒரு குறிப்பிட்ட நீதிபதியை மட்டும் இலக்கு வைத்துச் செய்யப்படும் மாற்றமல்ல.

இந்தத் திருத்தம் தொடர்பில் முப்பீட மகாநாயக்க தேரர்கள், கர்தினால், ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் இந்து மதத் தலைவர்கள் என அனைத்து மதத் தலைவர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இந்த நிலமையைச் சரியாகப் புரிந்து கொண்டுள்ளனர். அனுபவமிக்க நீதிபதிகளின் சேவையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச அளவிலும் பின்பற்றப்படும் நடைமுறையே இதுவாகும்.

அத்துடன் வழக்குத் தாமதத்தைக் குறைக்க நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது மட்டுமன்றி, இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம், சிறைச்சாலைகள், சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட அனைத்துக் கட்டமைப்புகளையும் டிஜிட்டல் மயமாக்கி, வெற்றிடங்களை நிரப்பவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கத்தின் இந்த நகர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் பல்வேறு பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்தச் சட்டமூலம் தொடர்பான எந்தவொரு திருத்தத்திற்கும் அரசாங்கம் தயாராகவே உள்ளது. அரசியலமைப்பிற்கு உட்பட்ட முறையில் முன்னெடுக்கப்படும் இந்தச் சீர்திருத்தங்களை எவர் வேண்டுமானாலும் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தலாம்; உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைய பாராளுமன்றம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10