தவறுகளைச் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ளத் தயார் - தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க!

13 Aug, 2026 | 12:34 PM
image

(க.சிவலிங்கமூர்த்தி)

எமக்கு வாக்களித்து அதிகாரத்துக்கு கொண்டு வர பாடுபட்ட மக்களோ அல்லது எமது அமைப்புகளின் உறுப்பினர்களோ எம்மிடம் ஏதேனும் குறைகளையோ தவறுகளையோ சுட்டிக்காட்டினால், அவற்றை பணிவுடன் ஏற்றுக்கொண்டு உடனடியாக திருத்திக்கொள்ள நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா, நெதுன்கமுவ பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (12) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் விமர்சனங்களையோ, அவதூறுகளையோ அல்லது சமூக ஊடகங்களில் உருவாக்கப்படும் தவறான கருத்துக்களையோ நாம் சிறிதும் பொருட்படுத்துவதில்லை. எவரிடமிருந்தும் எவ்வித பிரதிபலன்களையும் எதிர்பாராமல் நாட்டை கட்டியெழுப்பவே நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.

எனினும், எம்மை ஆட்சிக்கு கொண்டு வந்த மக்கள் மற்றும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டும் குறைபாடுகளை பணிவுடன் ஏற்று திருத்திக்கொள்ள மக்கள் இயக்கம் என்ற ரீதியில் எப்போதும் தயாராகவே உள்ளோம்.

முந்தைய ஆட்சிக்காலத்தில் நாடு வங்குரோத்து அடைந்து, கடனையோ அல்லது எரிபொருளையோ பெற முடியாத நிலை காணப்பட்டது. கொவிட் பெருந்தொற்று காலத்தில் பியகம பணத்தாள் அச்சிடும் தொழிற்சாலையில் பணத்தை அச்சிட்டே மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான எமது அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில், நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு சென்றுள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக 5,200 பில்லியன் ரூபா வருமான இலக்கை கடந்து சாதனை படைத்துள்ளோம். இதன் பலன்களை மக்களுக்கு வழங்கும் வகையில் அஸ்வெசும நிவாரணம் அதிகரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு 6,000 ரூபா கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக 330 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், ஓய்வூதியதாரர்கள் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

முறையான நிர்வாகததுக்கு சான்றாக, நட்டத்தில் இயங்கிய மில்கோ நிறுவனம் தற்போது இலாபமீட்டி பால் பண்ணையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிலைக்கு உயர்ந்துள்ளது. கூட்டுறவுத் துறையில் சரியான தலைமைத்துவமும், கணினிமயமாக்கப்பட்ட வெளிப்படைத்தன்மையும் இருந்தால் அது நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் சக்தியாக மாறும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10