லிட்ரோ  கேஸ் நிறு­வ­னத்தின் முன்னாள் தலைவர் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்டில் அவர் உண்­மை­யி­லேயே  குற்றம் செய்­த­வரா என்­பதை விசா­ர­ணை­யி­லேயே கண்­டு­பி­டிக்­க­வேண்டும். ஒரு­வேளை அவர் குற்­ற­மற்­ற­வ­ரா­கக்­கூட இருக்­கலாம். எது­வாக இருந்­தாலும்  விசா­ர­ணையின் முடி­வி­லேயே கூற­மு­டியும் என்று அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார். 

நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை வெளி­யிடும் செய்­தி­யாளர் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளினால் எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்:

லிட்ரோ  கேஸ் நிறு­வ­னத்தின் முன்னாள் தலைவர் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்டில் அவர் உண்­மை­யி­லேயே  குற்றம் செய்­த­வரா என்­பதை விசா­ர­ணை­யி­லேயே கண்­டு­பி­டிக்­க­வேண்டும். ஒரு­வேளை அவர் குற்­ற­மற்­ற­வ­ரா­கக்­கூட இருக்­கலாம்.  அதா­வது  இவ­ரு­டைய வங்­கிக்­க­ணக்­கிற்கு யாரா­வது பணத்தை மோசடி செய்து வைப்பு செய்­தி­ருக்­கலாம். 

இவர் நண்பர் என்ற அடிப்­ப­டையில்   யாருக்­கா­வது உதவி செய்­தி­ருக்­கலாம். அவ்­வாறு ஏதா­வது இடம்­பெற்­றி­ருக்­கலாம் என நான் கரு­து­கிறேன். ஆனால் உண்­மையில் என்ன நடந்­தது என்­பது எங்­க­ளுக்கு தெரி­யாது. எது­வாக இருந்­தாலும்  விசா­ர­ணையின் முடி­வி­லேயே கூற­மு­டியும்.

கேள்வி: அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­படும் நிறு­வ­னங்­களின் தலை­வர்கள் இவ்­வாறு   அடிக்­கடி  பிரச்­சி­னை­களில் சிக்­கு­கின்­ற­னரே என்ன நடக்­கின்­றது?

பதில்:  எல்­லாரும் அவ்­வாறு இல்லை.  இது­வரை இரு­வர்தான் இவ்­வாறு  தொடர்­பு­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. 

கேள்வி: நாமல் ராஜ­பக்ஷ கைது செய்­யப்­பட்­டுள்ளார். ஆனால் இந்தப் போராட்­டத்தின் போது ஒரு­வரை  கடு­மை­யாக தாக்­கிய பொலிஸ் அதி­காரி கைது­செய்­யப்­ப­ட­வில்­லையே?

பதில்: அது தொடர்பில் பொலிஸ் ஆணைக்­குழு விசா­ரணை நடத்தி வரு­கி­றது. 

கேள்வி: விசா­ர­ணைகள் நடை­பெ­று­கின்­றன. ஆனால் அறிக்­கைகள் வரு­வ­தில்லை. என்­னதான் நடக்­கின்­றது.?

பதில்: விசா­ரணை நடக்­கின்­றது.  

கேள்வி: இவ்­வாறு  ஒரு­வரை பொலிஸ் அதி­காரி தாக்க முடி­யுமா?

பதில்: ஆர்ப்­பாட்டம் நடத்த வந்­த­வர்கள்  நடந்­து­கொண்ட விதத்­தையும் பார்க்­க­வேண்டும். 

கேள்வி: இதற்கு முன்­னரும் அம்­பாந்­தோட்டை ஆர்ப்­பாட்­டத்­தின்­போது ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் தாக்­கப்­பட்டார். என்­னதான் நடந்­தது?

பதில்: அந்த ஊட­க­வி­ய­லாளர்  ஆர்ப்­பாட்­டக்­கா­ர­ரைப்­போன்று  சுவ­ரொட்­டியைத் தூக்­கி­ய­தால்தான் அந்த நிலை ஏற்­பட்­டது. நான் அர­சி­ய­லுக்கு வரு­வ­தற்கு முன்­ப­தாக ஆர்ப்­பாட்டம் செய்­த­போது பொலி­ஸா­ரிடம்  அடி­வாங்­கி­யி­ருக்­கின்றேன்.  ஒரு­கா­லத்தில்  என்கு சல்யூட்  அடித்த பொலி­ஸாரே  பின்னர் என்னைத் தாக்­கி­யுள்­ளனர். 

கேள்வி: அமைச்­ச­ரவைக்  கூட்­டத்தில் தயா­சிறி ஜய­சே­க­ர­வுக்கும்,  லக்ஷ்மன்  கிரி­யெல்­ல­வுக்­கு­மி­டையில் கடும் முரண்­பாடு ஏற்­பட்­டதா?

பதில்: மத்­திய அதி­வேக வீதித் தொடர்பில் கருத்து முரண்­பா­டு­களே ஏற்­பட்­டன.   ஆனால் அவை சுமுகமாக முடிவடைந்தன.  

கேள்வி: நாமல் எம்.பி. யின் செயலாளர் கைது செய்யப்பட்டு உடனடியாகவே பிணையில் விடுவிக்கப்பட்டார். இது சரியா?

பதில்: அவருக்கு  எதிரான குற்றச்சாட்டு என்னவென்று பார்க்கவேண்டும். மேலும் அவருக்கு  சர்வதேச  பொலிஸாரின்  அழைப்பானை எப்போது கிடைத்தது என்றும்  பார்க்கப்படவேண்டிய விடயமாகும். என்றார்.