நீதிபதிகளின் ஓய்வூதிய வயது மாற்றம் குறித்து ஐ.நா. கவலை

Published By: Vishnu

13 Aug, 2026 | 06:37 AM
image

இலங்கை நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான சிறப்புப் பிரதிநிதி மார்கரெட் செட்டர்வைட் கவலை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நீதித்துறையின் சுதந்திரத்துக்கும், அதன் மீதான பொதுமக்களின் நம்பிக்கைக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், தற்போதைய நீதிபதிகளின் பதவிக்காலத்தை மாற்றுவது நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்கத்துறையின் தலையீடு குறித்த கேள்விகளை எழுப்பக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், வெளிப்படையானதும் அனைவரையும் உள்ளடக்கியதுமான ஆலோசனை செயல்முறையின் ஊடாகவே ஓய்வுபெறும் வயதில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு அவர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

இந்தத் திருத்தம் சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையின் (ICCPR) 14(1) ஆவது பிரிவுக்கும், நீதித்துறை சுதந்திரம் தொடர்பான ஐ.நா. கொள்கைகளுக்கும் முரணாகும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பீடம்: நிதி...

2026-09-12 06:25:33
news-image

மகன் என்பதால் நாமல் ராஜபக்ஷவால் ஒருபோதும்...

2026-09-12 06:23:42
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தை திருக்கோவிலில்...

2026-09-12 06:13:45
news-image

மழையால் மின் உற்பத்திச் செலவு குறைவு:...

2026-09-12 06:11:26
news-image

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் ஷிரான்...

2026-09-12 06:07:38
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம்: கோரிக்கைகள்...

2026-09-12 03:13:43
news-image

200 ஆண்டுகளாக முகவரியின்றி வாழ்ந்த மலையக...

2026-09-11 14:21:54
news-image

செம்மணி குறித்து சர்வதேச விசாரணை கோரி...

2026-09-11 16:21:56
news-image

வெளிநாட்டுத் தொழிலாளர் இழப்பீடு 14 இலட்சம்...

2026-09-11 14:34:03
news-image

மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் அரசாங்கம்...

2026-09-11 15:21:22
news-image

முல்லைத்தீவில் குடிநீர் வழங்கல் தேவை 20...

2026-09-11 15:22:03
news-image

கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவுக்கு சுதந்திரத்துக்கான விருது

2026-09-11 17:33:04