(செ.சுபதர்ஷனி)
பொரளை மெகசின் சிறைச்சாலையினுள் போதைப்பொருள் விநியோகித்து வந்ததாகத் தெரிவிக்கப்படும் சிறைக்காவலர் ஒருவர் போதைப்பொருளுடன், கல்கிஸை வலய குற்றப்புலனாய்வு பணியகத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸை வலய குற்றப்புலனாய்வு பணியகத்தினரால் முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த விசேட நடவடிக்கையின் போது 20 இலட்சம் ரூபா பெறுமதியான 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 20 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் ஆகியன அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.
கல்கிஸை பகுதியில் வைத்து அண்மையில் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கல்கிஸை வலய குற்றப்புலனாய்வு பணியகத்தினரால் கைதுசெய்யப்பட்டார். குறித்த நபர் 32 வயதுடைய தெஹிவளை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. கைது நடவடிக்கையைத் தொடர்ந்து சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த போதைப்பொருளை தற்போது சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துவரும் கைதி ஒருவர் வழங்கிய வாட்ஸ்அப் தகவலின் அடிப்படையில் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், அதனை பிறிதொரு நபருக்கு வழங்குவதற்காகவே தான் பெற்றுக்கொண்டதாகவும் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
குறித்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபரை பொரளை பகுதிக்கு அழைத்துச் சென்று சிவில் உடையில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் இரகசிய நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போது பொரளை வனாத வீதி பகுதியில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் நின்றுகொண்டிருந்த போது, அங்கு சிறைச்சாலை காவலர்களுக்கான பயிற்சி உடையில் வருகை தந்திருந்த நபர் ஒருவர் சந்தேகநபரிடமிருந்து பொதி ஒன்றை பெற முற்பட்ட போது அதிகாரிகள் குறித்த நபரையும் சாதுரியமாகக் கைதுசெய்திருந்தனர்.
இவர் தங்காலை பெலியத்த பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய சிறைகாவலர் எனவும், கடந்த ஜனவரி மாதமே பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டவர் எனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பில் கல்கிஸை வலய குற்றப்புலனாய்வு பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM