இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அடெல் இப்ராஹீம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
தூதுவரை வரவேற்ற பிரதமர், எகிப்து தூதுவராகப் பணியாற்றிய காலத்தில் இலங்கைக்கும் எகிப்திற்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவதற்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவைக்கும் பங்களிப்பிற்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இலங்கைக்கும் எகிப்திற்கும் இடையிலான முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தி, இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் ஒத்துழைப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், இத்துறையில் மேலும் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகளையும் இரு தரப்பினரும் சுட்டிக்காட்டினர்.
இச்சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி,பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM