இலங்கை வருகின்ற ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பப்லு டி கிரிப் முன்வைக்கும் ஆலோசனை கள் மற்றும் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய கடமைப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு இல்லை. அவர்களின் அனுபவ ஆலோசனைகளை யும் விடயங்களையும் அரசாங்கம் தேவை ஏற்படின் ஒரு வளமாக பயன்படுத்தலாம் என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றது.
உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கியநாடுகளின் உண்மை,நீதி, நட்டஈடு மற்றும் மீள் நிகழாமையை ஊக்குவிப்பதற்கான விசேட நிபுணர் பப்லு டீ கிரீப் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே வெளிவிவகார அமைச்சு மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
ஏனைய நாடுகளைப் போன்று இலங்கைக்கும் குறித்த ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர்களின் ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கடமையோ பிணைப்போ கிடையாது.
நிறுவன ரீதியான கட்டியெழுப்புதல்கள், கொள்கை உருவாக்கங்கள், கொள்கை மறு சீரமைப்புக்கள், பயிற்சிகள் போன்றவற்றுக்கு தேவையானால் ஐ.நா. விசேட நிபுணர்களின் ஆலோசனைகளை நாம் பரிசீலனைக்கு உட்படுத்தலாம்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரிலேயே ஐக்கிய நாடுகளின் உண்மை,நீதி, நட்டஈடு மற்றும் மீள் நிகழாமையை ஊக்குவிப்பதற்கான விசேட நிபுணர் பப்லு டீ கிரீப் இலங்கை வந்திருக்கின்றார்.
அவர் இலங்கையில் 10 ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை தங்கியிருப்பார். இந்த விஜயத்தின்போது ஐ.நா. விசேட பிரதிநிதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச உயர்மட்ட அதிகாரிகள், மாகாணமட்ட அதிகாரிகள், சிவில் சமூக பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், இலங்கையிலுள்ள சர்வதேச சமூக பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றார்.
அத்துடன் அவர் திருகோணமலை, மன் னார், அனுராதபுரம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, கண்டி, மாத்தறை, ஆகிய பகுதிகளுக்கும் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்வார்.
ஐ.நா.பிரதிநிதி யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் சிறப்பு சொற்பொழிவு ஆற்றவுள்ளதுடன் விஜயத்தின் இறுதியில் ஊடகவியலாளர்களை சந்திப்பார்.
இலங்கை தொடர்பான தனது அறிக்கையை அவர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் அடுத்த வருடம் செப்
டெம்பர் மாதம் சமர்ப்பிப்பார். அவர் அறிக்கையில் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பித்த பின்னர் அவற்றை கருத்தில் கொள்ள வேண்டுமா என்பது குறித்து இலங்கை அரசாங்கமே தீர்மானம் எடுக்கும்.
அது தொடர்பில் அரசாங்கமே தீர்மானம் எடுக்கும் அவரின் பரிந்துரைகள் இலங்கை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ள னவா என்பதை அரசாங்கமே தீர்மானிக்கும்.
பப்லு டீ கிரீப் ஐக்கியநாடுகளின் ஒரு சுயாதீன நிபுணராவார். விசேட நிபுணர்கள் ஆனவர்கள் நாடுகளின் மனித உரிமை நிலைமைகளை மதிப்பிட்டு அறிக்கையிடுவார்கள். பப்லு டீ கிரீப் உண்மை, நீதி, நட்டஈடு, மீள்நிகழாமை போன்றவை தொடர்பான நிபுணராவார். இவை பொறுப்புக்கூறல் பொறிமுறையின் முக்கிய அம்சமாகும்.
அவருடைய ஆணையானது அவருக்கு பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் நாடுகளுக்கு வழங்குவதற்கு ஆணையளிக் கிறது. அவர் தனது பணியில் பாதிக்கப்பட் டோரை அடிப்படையாக கொண்ட அணுகுமுறையை முன்னெடுப்பார். பாதிக்கப்பட்டோர் எனும் போது அது ஒரு சமூகமல்ல. அது பாதிக்கப்பட்ட அனைவ ரையும் குறிப்பிட்டு கூறுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM