(க.சிவலிங்கமூர்த்தி)
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய இரண்டையும் இணைத்து, அவற்றைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தொழிலாளர் போராட்ட மையத்தின் ஒழுங்கமைப்புச் செயலாளர் துமிந்த நாகமுவ குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊழியர் சேமலாப நிதியச் சட்டத் திருத்தம் மற்றும் நிதியங்களை ஒருங்கிணைக்கும் தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடத் தனியார் ஊழியர் மையப் பிரதிநிதிகள் புதன்கிழமை (12) தொழிலாளர் அமைச்சுக்கு சென்றனர். கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:
அரசாங்கம் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து, முதலாளிமார்கள், அரசாங்கம் மற்றும் தொழிலாளர்களை உள்ளடக்கிய புதிய நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கத் தீர்மானித்துள்ளது. முதலாளிமார்களின் நன்மைகளுக்காக இந்நிதியத்தைப் பயன்படுத்தும் இத்தகைய முயற்சியையே முன்னதாக மகிந்த ராஜபக்ஷவும் முன்னெடுக்க ஆயத்தமானார். அப்போது தொழிலாளர்கள் தங்களது உயிரைத் தியாகம் செய்தே இந்நிதியத்தைப் பாதுகாத்தனர்.
தற்போது மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக இருக்கும் இந்நிதியத்தைத் திறைசேரிக்குக் கடன் வழங்குவதற்குப் பதிலாக, பங்குச் சந்தைக்குக் கொண்டு செல்லவே முயற்சி செய்கின்றனர். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரநிலைகளுக்கு அமைவாகவே இதனைச் செய்வதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய்யான வாதமாகும்.
முன்னைய அரசாங்கங்கள் இதனைச் செய்ய முயன்ற போது சிவப்புக் கொடிகளை ஏந்திப் போராடியவர்கள், இன்று உழைக்கும் மக்களைக் காட்டிக்கொடுத்து வருகின்றனர். ரணில் விக்கிரமசிங்க செய்த வேலைகளையே இவர்கள் தற்போது மீண்டும் செய்து தொழிலாளர்களுக்குத் துரோகமிழைக்கப் பார்க்கின்றனர். உழைக்கும் மக்களின் கடைசி ஆறுதலான இந்நிதியத்தைக் கொள்ளையடிக்கும் முயற்சிக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராட ஆயத்தமாகுமாறு தொழிலாளர்களையும் தொழிற்சங்கங்களையும் கேட்டுக்கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM