(நெவில் அன்தனி)
ஹொங் கொங் காய் டெக் ஸ்போர்ட்ஸ் அரினா உள்ளக அரங்கில் இன்று புதன்கிழமை நடைபெற்ற 14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் கிண்ணப் பிரிவில் தனது கடைசி லீக் போட்டியில் மாலைதீவுகளை எதிர்கொண்ட இலங்கை 78 - 33 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஆனால் இந்த வெற்றி இலங்கைக்கு திருப்தி அளிக்கக்கூடியதாக அமையவில்லை. காரணம் இலங்கை அணியினர் வெற்றிக்காக மாத்திரம் விளையாடினார்களேயன்றி போதிய சராசரி புள்ளிகளை ஈட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடவில்லை.

இந்தப் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை, ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் கிண்ணப் பிரிவுக்கான அணிகள் நிலையில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.
மலேசியாவுக்கும் ஹொங் கொங்குக்கும் இடையில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் 39 - 27 என்ற கோல்கள் கணக்கில் இறுக்கமான வெற்றியை ஈட்டிய மலேசியா 4 வெற்றிகள், ஒரு தோல்வி என்ற பெறுபேறுகளுடன் 8 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.
சிங்கப்பூர் 4 வெற்றிகள், ஒரு தோல்வி என்ற பெறுபேறுகளுடன் 8 புள்ளகளைப் பெற்றுள்ளபோதிலும் கோல்கள் சராசரி அடிப்படையில் அணிகள் நிலையில் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது.
இலங்கை 3 வெற்றிகள், ஒரு வெற்றிதோல்வியற்ற முடிவு, ஒரு தோல்வி என்ற பெறுபேறுகளுடன் 7 புள்ளிகளைப் பெற்று அணிகள் நிலையில் 3ஆம் இடத்தில் இருக்கிறது.
வரவேற்பு நாடான ஹொங் கொங் 2 வெற்றிகள், 2 தோல்விகள், ஒரு வெற்றிதோல்வியற்ற முடிவு என்ற பெறுபெறுகளுடன் 5 புள்ளிகளைப் பெற்று அணிகள் நிலையில் நான்காம் இடத்தில் உள்ளது.
இதற்கு அமைய மலேசியாவும் ஹொங்கொங்கும் ஒரு அரை இறுதிப் போட்டியிலும் சிங்கப்பூரும் இலங்கையும் மற்றைய அரை இறுதிப் போட்டியிலும் வெள்ளிக்கிழமை விளையாடவுள்ளன.
மாலைதீவுகளுடனான போட்டியில் இடைவேளைக்கு முன்னர் 45 கோல்களைப் புகுத்திய இலங்iகினால் இடைவேளைக்குப் பின்னர் 33 கோல்களையே போட முடிந்தது.
கடைசி லீக் போட்டியின் முதல் இரண்டு ஆட்ட நேர பகுதிகளில் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் விளையாடிய இலங்கை முதலாவது ஆட்ட நேர பகுதியை 21 - 9 என்ற கோல்கள் கணக்கிலும் இரண்டாவது ஆட்ட நேர பகுதியை 24 - 11 என்ற கோல்கள் கணக்கிலும் தனதாக்கி இடைவேளையின்போது 45 - 20 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.
ஆனால், 3ஆவது மற்றும் 4ஆவது ஆட்ட நேர பகுதிகளில் பயிற்றுநர் சொமித்தா டி அல்விஸின் வியூகம் இலங்கைக்கு கைகொடுக்கவில்லை.
3ஆவது ஆட்ட நேர பகுதியை 16 - 3 என தனதாக்கிய இலங்கை, கடைசி ஆட்ட நேர பகுதியில் மாலைதீவுகளிடம் கடும் சவாலை எதிர்கொண்டு 17 - 10 என அப் பகுதியைத் தனதாக்கிக்கொண்டது.
இலங்கை சார்பாக திசலா அல்கம முதல் இரண்டு ஆட்ட நேர பகுதிகளில் விளையாடி 41 முயற்சிகளில் 40 கோல்களைப் புகுத்தினார்.
ரஷ்மி பெரேரா போட்டி முழுவதும் விளையாடி 33 முயற்சிகளில் 23 கோல்களையும் 3ஆம், 4ஆம் ஆட்ட நேர பகுதிகளில் திசலாவுக்கு பதிலாக கோல் ஷூட்டர் நிலையில் விளையாடிய துலங்கி வன்னிதிலக்க 21 முயற்சிகளில் 15 கோல்களையும் போட்டனர்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM