15 பில்லியன் ரூபா நிதித் தேவையை சர்ச்சைக்குரிய பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் ஊடாக நிவர்த்தி செய்ய தாம் ஒரு போதும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு ஆலோசனை வழங்கவில்லை என்று சர்வதேச வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்ரம, அரச தொழில் முயற்சியாண்மை அமைச்சர் கபீர் ஹாசிம் ஆகியோர் நேற்று ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியம் அளித்தனர்.

எவ்வாறாயினும் நெடுஞ்சாலைகள் நிர்மாணம் தொடர்பில் அரசாங்கத்துக்கு 18 பில்லியன் ரூபா அப்போது தேவைப்பட்டமை, அதில் 3 பில்லியன் ரூபா அரசாங்கத்திடம் கையிருப்பில் இருந்தமை தொடர்பில் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகத்துக்கு முதல் நாள் காலை வேளையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பேசப்பட்டதாகவும் அவ்விரு அமைச்சர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிணை முறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களான உயர் நீதிமன்ற நீதியர்சர் கே.டி.சித்ரசிறியின் தலைமையில் நீதியரசர் பிரசன்ன ஜயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் நாயகம் வேலுப்பிள்ளை கந்தசாமி ஆகியோர் முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.
இதன்போது, ஆணைக்குழுவின் உருப்பினர்கள் கேட்ட குறுக்கு கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர் மலிக் சமரவிக்ரம, அர்ஜுன் அலோசியஸிடமிருந்தோ அவரின் நிறுவனமான பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திடமிருந்தோ தனது கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்த சந்தர்ப்பத்திலும் நிதி பெறப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.
நேற்று முன் தினம் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு விடுத்த அறிவித்தலின் பிரகாரம் சர்வதேச வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்ரம, அரச தொழில் முயற்சியாண்மை அமைச்சர் கபீர் ஹாசிம் ஆகியோர் நேற்று காலை ஜனாதிபதி ஆணைக் குழுவில் முன்னிலையாகியிருந்தனர். அங்கு தலா 10 நிமிடங்கள் அவர்கள் சாட்சியம் அளித்தனர்.
குறிப்பாக சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் இடம்பெற்ற நாளுக்கு முன்னைய தினம், அதாவது 2015 பெப்ரவரி 26 ஆம் திகதி காலை வேளையில் அப்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் ஆகியோருடன் நடைபெற்ற காலை வேளை சந்திப்பு குறித்து இதன்போது இரு அமைச்சர்களிடமும் அரச சட்டவாதிகளால் கேள்வி எழுப்பட்டது.
குறித்த உத்தியோகபூர்வபற்றற்ற சந்திப்பு குறித்து இதன்போது இரு அமைச்சர்களும் பதில் வழங்கியதுடன், அந்த சந்திப்பின் போது ஒரு போதும் பிணை முறி ஊடாக அரசாங்கத்துக்கு தேவைப்பட்ட நிதியை திரட்ட தாம் அலோசனை வழங்கவில்லை என அவர்கள் சுட்டிக்கடடியுள்ளனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM