புத்தளம் - தப்போவ சரணாயலத்திற்கு சொந்தமான சியம்பலேவ காட்டுப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்வபம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் கருவலகஸ்வெவ - சியம்பலேவ பிரதேசத்தை சேர்ந்த 18 மற்றும் 31 வயதுடையவர்களே இறந்தவர்களாவர்.

குறித்த காட்டுப்பகுதிக்குள் மரங்களை வெட்டுவதற்காக 4 பேர் சென்றுள்ளதாகவும் குறித்த நால்வர் மீதும் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே இருவரும் படுகாயமடைந்த நிலையில், புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்கள் விலங்கு வேட்டைக்காக காட்டுப்பகுதிக்கு வந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இச் சம்பவம் தொடர்பில் கருவெலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.