2025இல் முல்லைத்தீவில் 8,220.49 மெற்றிக்தொன் மீன்கள் பிடிபட்டன ; அதிகளவான மீன்கள் சட்டவிரோதமாகவே பிடிக்கப்பட்டவை - ரவிகரன் 

12 Aug, 2026 | 05:12 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 2025ஆம் ஆண்டு 8,220.49 மெற்றிக்தொன் மீன் உற்பத்தி கிடைத்துள்ளதாக மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு கிடைத்துள்ள மீன் உற்பத்தியில் பெருமளவான மீன்கள் சட்டவிரோத தொழில் முறைகளைப் பாவித்து பிடிக்கப்பட்டவை என சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று (11) நடைபெற்ற இவ்வாண்டுக்கான இரண்டாவது மாவட்ட கடற்றொழில்சார் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

அங்கு ரவிகரன் மேலும் சில விடயங்கள் தொடர்பாகவும் பேசியிருந்தார். 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டு 8,220.49 மெற்றிக்தொன் மீன்பிடி இடம்பெற்றிருப்பதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்தப் புள்ளிவிபரங்களில் சுட்டிக்காட்டப்படுவது சட்டவிரோத கடற்றொழில் முறையில் பிடிக்கப்பட்ட மீன்களின் அளவா அல்லது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பிடிக்கப்பட்ட மீன்களின் அளவா என்பதை அறிய விரும்புகின்றேன் என ரவிகரன் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் கடலில் இருந்து கரைக்கு கொண்டுவரப்படுகின்ற அனைத்து மீன்களையும் சேர்த்தே தம்மால் அளவீடு செய்யப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளரால் இதன்போது பதிலளிக்கப்பட்டது.

தொடர்ந்து ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

அவ்வாறெனில் சட்டவிரோத கடற்றொழில் முறைகளைப் பின்பற்றி பிடிக்கப்படுகின்ற மீன்களும் சேர்த்தே தங்களால் அளவிடப்படுகின்றன என்பதை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் தடுத்து நிறுத்தப்படவேண்டிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் முறைகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டே இங்கு அதிக தொகையான மீன்கள் பிடிக்கப்படுகின்றன.

சட்டத்திற்கு உட்பட்டு கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் இவ்வாறு அதிகளவான மீனைப் பிடிக்கவில்லை. அவர்கள் தொடர்ந்தும் துன்பங்களை அனுபவித்துவருகின்றனர்.

ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 8,220.49 மெற்றிக்தொன் எனும் பாரிய அளவிலான மீன்பிடி இடம்பெற்றிருப்பதான ஒரு தகவலே முழு நாட்டுக்கும் உலகிற்கும் வெளிப்படுத்தப்படுகிறது.

ஆனால் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளின் ஊடாகவே பெருமளவான மீன்கள் பிடிக்கப்பட்டன என்ற தகவல்கள் வெளிப்படுத்தப்படுவதில்லை. அதனை வெளிப்படுத்துவதற்காகவே இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டுகின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தம்: ஜனாதிபதியின் கூற்றில்...

2026-09-08 14:55:10
news-image

2029இல் அநுர, குமார் குணரத்தினம், சீலரத்ன......

2026-09-08 15:49:13
news-image

அதிவேகமாக ஜனநாயகத்தை அழித்து வருகிறது அரசு...

2026-09-08 16:17:06
news-image

வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை...

2026-09-08 16:28:53
news-image

பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு 3 மாதங்களுக்கு...

2026-09-08 16:31:25
news-image

ஜனாதிபதியும் 159 உறுப்பினர்களும் மட்டுமே சுபீட்சமாக...

2026-09-08 16:48:21
news-image

ஆயுதமோதலின்போது இடம்பெற்ற மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை!...

2026-09-08 19:09:11
news-image

ஜனாதிபதியின் தலைமையில் அரச இலக்கிய விருது...

2026-09-08 21:31:51
news-image

சுருக்குவலை மீன்பிடிப் படகுகளுக்கான அனுமதிப்பத்திரம் ஒரே...

2026-09-08 18:00:08