வெளிப்படைத்தன்மை கொண்ட நீண்டகால முதலீடுகளுக்கு இலங்கையின் கதவுகள் திறந்தே இருக்கும் - பிரதமர் வலியுறுத்து

12 Aug, 2026 | 04:42 PM
image

(க.சிவலிங்கமூர்த்தி)

வெளிப்படைத்தன்மை கொண்ட நீண்டகால முதலீடுகளுக்கு இலங்கையின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. எனவே மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வமிக்க முதலீடுகளுக்கு அரசாங்கம் அதிகபட்ச ஆதரவை வழங்கும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் உலகளாவிய மையம் மற்றும் இலங்கை முதலீட்டு சபை ஆகியன இணைந்து கொழும்பு சினமன் லைப் ஹோட்டலில் புதன்கிழமை (12) ஏற்பாடு செய்த ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை உள்ளடக்கிய முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகளின் உதவிப் பொதுச்செயலாளர் சாண்டா ஒஜியாம்போ, மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டுப் முதலீட்டாளர்கள் உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு அரசாங்கத்தால் மட்டும் தனியாகச் செயற்பட முடியாது. அரசு, தனியார் மற்றும் சிவில் சமூகங்கள் இணைந்து செயற்பட வேண்டும். அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் ஆண்டுக்கு 2.5 முதல் 4 ட்ரில்லியன் டொலர் வரையிலும், ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் 1.5 ட்ரில்லியன் டொலரும் நிதிப் பற்றாக்குறை நிலவுகின்றது. 2030 ஆம் ஆண்டாகும்போது இப்பிராந்தியத்தில் 88 சதவீதமான அபிவிருத்தி இலக்குகளை தவறவிடும் அபாயம் உள்ளதால் முதலீடுகளை விரைவுபடுத்த வேண்டும்.

சவாலான காலப்பகுதிக்கு பின்னர் இலங்கை தனது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் பொருளாதாரம் 5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்ததுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி 108.8 பில்லியன் டொலராக உயர்ந்தது.

தலா வருமானம் 5,000 டொலர்களைக் கடந்துள்ளது. இருப்பினும், வெறும் எண்களால் மட்டுமே காட்டப்படும் வளர்ச்சியையன்றி, நியாயமான நன்மைகள் பகிர்ந்தளிக்கப்படும் மாற்றத்தையே எதிர்பார்க்கின்றோம்.

இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல் ஊழியர்களுக்குப் போதுமான சம்பளம் வழங்குவது, பெண்களுக்கு வாய்ப்பளிப்பது மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வமிக்க முதலீடுகளையே எதிர்பார்க்கின்றோம். இலங்கை மத்திய வங்கியின் 'நிலையான நிதி வழிமுறை வரைபடம்' மற்றும் 'பசுமைப் பத்திரக் கட்டமைப்பு' ஊடாகக் காலநிலை சவால்களுக்கு முகங்கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10