தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள் மோதி விபத்து: பாம்புதான் காரணமாம்!

Published By: Digital Desk 3

12 Aug, 2026 | 04:38 PM
image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வீதியைக் கடக்க முயன்ற பாம்பொன்றைத் தவிர்க்க முயன்று சொகுசு கார் ஒன்று திடீரெனப் பிரேக் பிடித்ததால், அதற்குப் பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி நேற்று (11) செவ்வாய்க்கிழமை பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் மூன்று வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளதுடன், மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதூவ மற்றும் கொக்மதுவ இடைமாற்றுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் கொக்மதுவவில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு காரின் சாரதி, வீதியைக் கடக்க முயன்ற பாம்பைப் பார்த்து காரை உடனடியாக நிறுத்தியுள்ளார்.

பின்னால் மாத்தறையில் இருந்து பிலியந்தலை நோக்கி வந்த சொகுசுப் பேருந்து காரின் பின்பகுதியில் பலமாக மோதியது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்து சுழன்ற அந்தக் கார், கொழும்பு நோக்கி வந்த மற்றொரு சொகுசு காரின் மீது மோதி, இடதுபுறப் பாதுகாப்பு வேலி மீது மோதி நின்றது.

முதன்மை காரைச் செலுத்திய சாரதி மற்றும் அதில் பயணித்த இரு பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்து காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தினால் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொழும்பு நோக்கிய பாதையில் சிறிது நேரம் போக்குவரத்துத் தடங்கல் ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பில் அதிவேக நெடுஞ்சாலைப் போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10