இலங்கை உட்படப் பல நாடுகளில் ஃபேஸ்புக் சமூக வலைதளப் பயன்பாட்டில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலகம் முழுவதிலும் இருந்து, முகநூல் தளத்தில் கோளாறுகள் ஏற்பட்டிருப்பதாகப் புகார்கள் கிளம்பியுள்ளன.

இலங்கையிலும் சிலரது முகநூல் கணக்குகளில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

தளம் லோட் ஆகாமை, ‘போஸ்ட் பொக்ஸ்’ போன்ற உப கருவிகள் மறைந்துவிட்டமை உட்படப் பல திடீர்ச் சிக்கல்கள் ஃபேஸ்புக்கில் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதை, பயனாளர்களின் புகார்களைப் பதிவு செய்யும் ‘இன்டிபென்டன்ட் சைட் டௌன் டிட்டெக்டர்’ என்ற தளம் அடையாளம் கண்டுள்ளது.