இன்றைய திகதியில் நுரையீரல் பகுதியில் ஏற்படும் தொற்று பாதிப்புகளையும், புற்றுநோய் பாதிப்புகளையும் துல்லியமாக அவதானித்து சிகிச்சை அளிப்பதற்காக எண்டோபிரான்சியல் அல்ட்ரா சவுண்ட் எனும் நவீன பரிசோதனை முறை அறிமுகமாகி பலனளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
நுரையீரல் ,மூச்சுக்குழாய், நிணநீர் குழாய்களில் உள்ள முடிச்சுகள், கட்டிகள், வீக்கங்கள் ஆகியவற்றை துல்லியமாக கண்டறிய உதவும் நவீன மருத்துவ பரிசோதனை முறைதான் எண்டோபிரான்சியல் அல்ட்ரா சவுண்ட் எனும் பரிசோதனை முறையாகும். இது பிரான்ஸ்கோப்பி மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்முறையாகும். இது நுரையீரலில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளையும், திசு பரிசோதனையும் மேற்கொள்ளும் நவீன பரிசோதனை முறையாகும். மேலும் இது ஒரு குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட பிரத்யேக செயல்முறையாகும்.
இந்த பரிசோதனையின் மூலம் நுரையீரலின் மேற்பரப்பு ,சுவாச குழாய்களின் மேற்பரப்பு ,நுரையீரலின் உட்பகுதி மற்றும் ரத்த நாளங்கள், அதன் அருகே அமையப்பெற்றுள்ள நிணநீர் முடிச்சுகள்... ஆகியவற்றினை துல்லியமாக கண்டறிய இயலும். இதன் மூலம் நுரையீரல் பகுதிகளில் காச நோய் , புற்றுநோய் பாதிப்பின் வீரியத்தையும், தன்மையையும் அதன் நிலையையும் துல்லியமாக அவதானிக்க இயலும். இதனைத் தொடர்ந்து வைத்திய நிபுணர்கள் பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப நவீன மருத்துவ தொழில்நுட்பங்களுடன் கூடிய பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மற்றும் சிறிய அளவிலான சத்திர சிகிச்சை ஆகியவற்றை மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள்.
வைத்தியர் சுரேஷ் தொகுப்பு அனுஷா.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM