ஊட­கங்­களை அச்­சு­றுத்தும் வகையில் பிர­தமர் ரணில் செயற்­ப­டு­கிறார்

Published By: Raam

30 Jan, 2016 | 09:46 AM
image

ஊட­கங்­களை அச்­சு­றுத்தும் வகையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாரா­ளு­மன்­றத்தில் உரை நிகழ்த்­தி­ய­மையை தாம் வன்­மை­யாக கண்­டிப்­ப­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்­துள்ளார்.

பிர­த­மரின் பாரா­ளு­மன்ற உரை தொடர்பில் அவர் வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யொன்­றி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­க­ப்பட்­டுள்­ள­தா­வது,

கடந்த 28 ஆம் திகதி பாரா­ளு­ம­ன­றத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆற்­றிய உரை­யினை கேட்கும் சந்­தர்ப்பம் எனக்கு கிடைக்­காமல் போனது. அந்த நேரத்தில் அர­சியல் செயற்­பா­டொன்­றுக்­காக நான் கொழும்­பி­லி­ருந்து வெளி­பி­ர­தேசம் ஒன்­றுக்கு செல்ல வேண்­டிய கட்­டாய நிலை­யி­னா­லேயே அந்த சந்­தர்ப்பம் தவ­றி­விட்­டது.

ஆனால் அந்த உரையை தொலைக்­காட்சி செய்­தியில் கேட்­ட­போது அவர் பிர­த­ம­ராக மட்­டு­மல்­லாது சாதா­ரண பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அள­விற்­கா­வது ஏற்­றுக்­கொள்ள முடி­யாத நபர் என்ற எண்ணம் எனக்கு தோன்­றி­யது.

அதேபோல் நாட்டில் ஏற்­பட்ட புரட்­சிக்கு பங்­க­ளிப்புச் செய்த ஊட­க­வி­யலாளர் சுதந்­தி­ர­மாக செயற்­ப­டலாம் என்ற விதத்­திலும் அர­சாங்­கத்­திற்கு எதி­ரான கருத்­துக்­களை வெளி­ யி­டு­ப­வர்­களின் கருத்து சுதந்­திரம் பறிக்­கப்­படும் என்ற கோணத்­தி­லுமே பிர­த­மரின் மேற்­படி உரை அமைந்­துள்­ளது.

அதேபோல் பிர­த­மரின் இந்த உரை நாட்டில் ஏகா­தி­பத்­தி­யத்தை நிலை­நாட்­டு­வ­தற்­கான அடித்­த­ள­மாக அமைந்­துள்­ளதே தவிர பிர­தமர் தொடர்ந்தும் கூறு­வது போன்று ஐக்­கி­ய­பாட்­டு­ட­னான ஆட்­சிக்கோ அல்­லது ஜன­நா­யக ஆட­சிக்கோ இந்த உரை வழி­செய்­யாது.

அதனால் தனது புகழை பாடுபவர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கும் எதிர்ப்ப வர்களை அச்சுறுத்துவதற்கும் பெயர்தானா நல்லாட்சி என்ற வினாவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பகிரங்கமாக வினவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தனது நிலைப்பாட்டுக்கு மாறான நிலை ப்பாட்டினை உடைய ஊடகவியலாளர்களை தறவான வார்த்தை பிரயோகங்களால் திட்டுவது பிரதமருக்குரிய பண்பல்ல என்பது பிரதமருக்கு புரியாமல் இருப்பது வருத்தத்திற்குரியதாகும். ஊடகவியலா ளர்கள் தாம் கூறும் கருத்துகள் குறித்து தீர்க்க மாக ஆராய்ந்து குறிப்பிடுவர். அவ்வாறான ஊடகங்களை பிரதமர் அச்சுறுத்துவதால் இனி அவர்களிடமிருந்தும் உண்மையான விடயங்களை எதிர்பார்ப்பது கடினமான விடயமாகிவிடும்.

ஊடகவியலாளர்களுக்கு இருந்த ஓரளவு சுதந்திரத்தையும் முழுமைாக பறித்துக் கொண்டுள்ள பிரதமருக்கு எதிராக நாட்டு மக்கள் அணிதிரள வேண்டும் என தெரி வித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41