பாக்யத்தை அருளும் பூஜையறை

12 Aug, 2026 | 01:51 PM
image

இன்றைய சூழலில் எம்மில் ஒவ்வொருவருக்கும் நாளாந்தம் காலையில் கண்விழித்ததும் புதுப்புது பிரச்சனைகளால் மன அழுத்தம் ஏற்படுவதும், அது அதிகரிப்பதும் இயல்பாகிவிட்டது. இந்தத் தருணத்தில் எம்மில் பலரும் நாளாந்தம் ஏதேனும் ஒரு வகையில் அதிர்ஷ்டமும், பாக்கியமும் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றாலும்... இதனை சாத்தியப்படுத்துவதற்கான ஒரு சூட்சமத்தை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் அருளியிருக்கிறார்கள்.

இதற்கு தேவையான பொருள் : குத்துவிளக்கு, பசு நெய், பஞ்சு திரி.

உங்களுடைய வீட்டின் பூஜையறையில் நிறைய தெய்வ திரு உருவங்களை இடம்பெறச் செய்வதை காட்டிலும்... உங்கள் மனதிற்கு பிடித்த இஷ்ட தெய்வத்தின் திரு உருவம் படத்தில் ஒன்றை மட்டும் பெரிதாக இடம்பெறச் செய்யுங்கள். அத்துடன் ஒரே ஒரு பஞ்ச முகம் கொண்ட பித்தளையாலான ஒரு குத்துவிளக்கை வைத்து, அதில் நெய்யை ஊற்றி, திரியை வைத்து, அதிகாலை பிரம்ம முகூர்த்த தருணமான 4:30 மணி முதல் 6:00 மணிக்குள்ளாக தீபமேற்றி, உங்களுடைய கோரிக்கையையும், தேவைகளையும் இறைவனிடம் சமர்ப்பணம் செய்யுங்கள். ஏனெனில் பூஜை அறை என்பது நிலம்- நீர் -காற்று -நெருப்பு -ஆகிய நான்கு தத்துவங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆகாய பூத தத்துவமாக இயங்குவதால்... அதிகாலை தருணத்தில் பிரபஞ்ச பேராற்றல் மிகுந்து இருப்பதால்.. இந்தத் தருணத்தில் தீபமேற்றி இஷ்ட தெய்வத்தை மனதாரப் பிரார்த்தித்தால்.. உங்களுடைய வாழ்க்கையில் எந்தவித சிக்கல்களும் எழாமல்.. அதையும் கடந்து எழுந்தால்... அதை எளிதாக எதிர்கொள்ளும் மன தெளிவையும் பூஜை அறையில் மேற்கொள்ளும் பிரார்த்தனை உங்களுக்கு அருள் புரியும்.

அதே தருணத்தில் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் விரதம் இருந்து குலதெய்வத்தை அதற்கே உரிய ஆலய வளாகத்திற்கு சென்று வணங்கி பிரார்த்திப்பதையும் தொடர வேண்டும். இதனை ஒருங்கிணைந்து செய்தால்... மன அழுத்தம் இல்லாமல் நிதி சுதந்திரத்துடன் மகிழ்ச்சியாக வாழ இயலும்.

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏழரைச்சனியின் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற!

2026-09-04 15:49:33
news-image

கடைசி பிறவிக்கான பிரத்யேக வழிபாடு என்ன?

2026-09-03 16:58:02
news-image

காரியத்தில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-09-02 17:08:27
news-image

திருஷ்டி தோஷங்கள் நீங்க!?

2026-09-01 14:59:16
news-image

மாத ஊதியம் குறையாமல் நீடிப்பதற்கான பிரத்தியேக...

2026-08-31 17:31:58
news-image

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் -...

2026-08-31 14:40:21
news-image

கணவன் - மனைவி இடையே உள்ள...

2026-08-29 15:43:45
news-image

மனதிற்கினிய வாழ்க்கைத் துணை அமைவதற்கான எளிய...

2026-08-28 16:57:23
news-image

ராகு தோஷத்தை நீக்குவதற்கான எளிய வழிமுறை

2026-08-27 16:32:55
news-image

மகாலட்சுமி வழிபாடு : சில சூட்சமங்கள்

2026-08-26 16:50:28
news-image

தனவரவு தங்குதடையின்றி கிடைப்பதற்கான எளிய வழிமுறை..!

2026-08-25 17:21:17
news-image

உறவுகளின் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும் பிரத்யேக...

2026-08-24 16:27:53