ஆடி அமாவாசை விரதம் இன்று புதன்கிழமை (12) அனுஷ்டிக்கப்படுகிறது. ஆடி அமாவாசை மிகவும் சிறப்பானதாகும். சூரியன் வடதிசையில் இருந்து தென் திசை நோக்கி அதாவது தட்சாயணம் நோக்கி சூரியனின் நகர்வு ஆரம்பமாவது ஆடியிலாகும். இதனால் இந்த ஆடி அமாவாசை சிறப்பானது. இந்த ஆடி அமாவாசையில் பிதிர்களுக்காக விரதம் இருந்து அவர்கள் ஆசி பெறுவது மிகவும் சிறப்பாகும் என்று சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா ஆடி அமாவாசை தினத்துக்கான நற்சிந்தனையினை வழங்கியுள்ளார்.
மேலும் அவர் கருத்துரைக்கையில்,
வள்ளுவப் பெருந்தகை தென்புலத்தார் வழிபாடு பற்றி கூறியிருக்கிறார். இந்த ஆடி அமாவாசையில் முன்னோர்களை நினைத்து விரதம் இருந்து தர்ப்பணம் செய்து உதவியற்றவர்களுக்கு தானம் செய்து முன்னோர்களை நினைத்து படைத்து சிவனுக்கு மோட்ச தீபம் ஏற்றி முன்னோர்களுக்கான கருமங்களை செய்வதன் மூலம் அவர்களின் ஆசி பெறுவதால் சந்ததி வளமாகும் என்று பிதிர் வழிபாடு தெளிவுபடுத்தி இருக்கிறது.
அந்த வகையில் ஆடி அமாவாசையன்று பிதிர் உலகத்தில் இருந்து பிதிர்கள் பூலோகத்திற்கு வருவதாகவும் அவர்களை நினைத்து நாம் செய்யும் கருமங்களில் மகிழ்ந்து குடும்பத்தை ஆசீர்வதித்து சந்ததிகள் வளம் பெற ஆசீர்வாதம் வழங்குவார்கள் என்பது ஐதீகம்.
ஆடி அமாவாசை தினத்தன்று நதியோரங்கள், கடலோரங்களில் தர்ப்பணம் செய்வதும் அந்தணர்களுக்கு தானம் கொடுப்பதும் பசு மாட்டுக்கு அகத்திக்கீரை கொடுப்பதும் மிகவும் சிறப்பானதாகும் என்கிறார்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM