உலகின் மிக முக்கியமான கடல்சார் வர்த்தகப் பாதையான 'ஹோர்முஸ் நீரிணை' மீது அமெரிக்கா “முழுமையான கட்டுப்பாட்டை” கொண்டுள்ளதாகவும், அதனை தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மேரிலாந்திலுள்ள ஆண்ட்ரூஸ் கூட்டுப் படைத்தளத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசியபோதே அவர் இக்கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
"நான் ஈரானை நம்பவில்லை. என்னை ஏமாற்றவே அவர்கள் முயன்றனர். தற்போது ஹோர்முஸ் நீரிணையின் மீது அமெரிக்காவிற்கே முழுமையான கட்டுப்பாடு உள்ளது. அவர்களிடம் (ஈரானிடம்) எந்தக் கட்டுப்பாடும் இல்லை, அது எங்களுடையது" என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஏதேனும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர்கள் முற்றிலும் அழித்தொழிக்கப்படுவார்கள் என மிகக் கடுமையான தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 50 ஆண்டுகளாக மேற்காசியப் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த நாடு (ஈரான்), இனி அத்தகைய ஆதிக்கத்தைச் செலுத்த முடியாது எனவும் அமெரிக்கா தற்போது மிகவும் வலுவான நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப்பின் கூற்றுகளுக்குப் பதிலளித்துள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சகப் பேச்சாளர் இஸ்மாயில் பாகே ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழலுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
சர்வதே மசகு எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இப் பாதையில் நிலவும் இப்பதற்றமான சூழ்நிலையினால், தற்போது ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையே கடல்சார் போக்குவரத்து தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM