குழந்தைத் திருமணம் மற்றும் சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகம் குறித்த மிக முக்கியமான தீர்ப்பொன்றை டெல்லி மீயுயர் நீதிமன்றம் இன்று (11) வழங்கியுள்ளது.

பதினெட்டு வயதுக்கு உட்பட்ட பெண்பிள்ளைகளை, அவர்களின் சம்மதத்தின் பேரிலோ, பலவந்தமாகவோ பாலுறவுக்கு உட்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்று டெல்லி மீயுயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

“பதினெட்டு வயதுக்குக் குறைந்த பெண்ணை, அவர் மனைவியாகவே இருந்தாலும் பாலுறவுக்கு உட்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண் ஒரு வருடத்துக்குள் பொலிஸில் புகார் அளிக்கலாம்” என அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதினைந்து வயதுக்கு மேற்பட்ட பெண்பிள்ளைகள் திருமணமானவர்களாக இருப்பின் அவர்கள் உறவு கொள்ளலாம் என்ற சட்டம் இந்தியாவில் நடைமுறையில் இருந்துவந்தது. தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய தீர்ப்பானது அந்தச் சட்டத்தை இரத்துச் செய்வதாக அமைந்துள்ளது.