சவூதி அரேபியாவில் தொழில் எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்காகநடத்தப்படும் தொழிற்திறன் சரிபார்ப்புப்  பரீட்சையை தாய் மொழியில் நடத்த நடவடிக்கை 

Published By: Vishnu

12 Aug, 2026 | 05:19 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

சவூதி அரேபியாவின் வேலைவாய்ப்புகளுக்காகப் புறப்படும் தொழிற்திறன்மிக்க தொழிலாளர்களுக்காக நடத்தப்படும்  தொழிற்திறன் சரிபார்ப்புப் (எஸ்.வி.பி) பரீட்சையை எதிர்காலத்தில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு சவூதி அரேபியாவின் டக்காமோல் ஹோல்டிங் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், சவூதி அரேபியாவின் ரியாத் இலங்கை தூதரகத்தின் அறிக்கையை மேற்கோள்க்காட்டி அறிவித்துள்ளது.

ரியாத் இலங்கை தூதரகத்தினால் நீண்ட காலமாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளின் பலனாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இதுவரை மொழி ரீதியான தடைகள் காரணமாக எஸ்.வி.பி  பரீட்சையை எதிர்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கிய  வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்களுக்கு இது  பெரியளவில் நிவாரணமாகும். 

கிடைக்கப்பெற்ற அதிகாரப்பூர்வ அறிவித்தலின்படி, எஸ்.வி.பி.பரீட்சை வினாத்தாள்கள் டக்காமோல் ஒன்லைன் கட்டமைப்பில் இரண்டு கட்டங்களாகச் சேர்க்கப்படவுள்ளன. முதலாம் கட்டம் 2026 ஜூலை 29 அன்று ஆரம்பமாகியுள்ளது. இரண்டாம் கட்டம் 2026 ஆகஸ்ட் 15 திகதி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த புதிய வசதியின் மூலம், சவூதி அரேபியாவின் உரிய தொழிற்திறன் வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் தங்களது தாய்மொழியிலேயே கட்டாய எஸ்.வி.பி. பரீட்சைக்குத் தோற்ற முடியும். மேலும், அதிகளவான தொழிற்திறன் மற்றும் அரைத் தொழிற்திறன் கொண்ட தொழிலாளர்கள் சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்புக்கான சந்தர்ப்பங்களுக்கு தகுதிபெற இது பெரிதும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமானது இந்த புதிய திட்டம் குறித்து நாடு முழுவதும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கும் இந்தத் தகவல்களை அனுப்பி வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு விழிப்புணர்வூட்டவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பணியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தம்: ஜனாதிபதியின் கூற்றில்...

2026-09-08 14:55:10
news-image

2029இல் அநுர, குமார் குணரத்தினம், சீலரத்ன......

2026-09-08 15:49:13
news-image

அதிவேகமாக ஜனநாயகத்தை அழித்து வருகிறது அரசு...

2026-09-08 16:17:06
news-image

வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை...

2026-09-08 16:28:53
news-image

பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு 3 மாதங்களுக்கு...

2026-09-08 16:31:25
news-image

ஜனாதிபதியும் 159 உறுப்பினர்களும் மட்டுமே சுபீட்சமாக...

2026-09-08 16:48:21
news-image

ஆயுதமோதலின்போது இடம்பெற்ற மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை!...

2026-09-08 19:09:11
news-image

ஜனாதிபதியின் தலைமையில் அரச இலக்கிய விருது...

2026-09-08 21:31:51
news-image

சுருக்குவலை மீன்பிடிப் படகுகளுக்கான அனுமதிப்பத்திரம் ஒரே...

2026-09-08 18:00:08