முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை

Published By: Vishnu

12 Aug, 2026 | 12:34 AM
image

(செ. சுபதர்ஷனி)

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு கடற்றொழில் அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மணலை அகற்றி சந்தையில் விற்பனை செய்யும் பணிக்காக கொரிய நிறுவனம் ஒன்றைத் தெரிவுசெய்து, அப்பணிகளுக்காக கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 'வெலிகொவ்வா' எனும் கப்பலை குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு அந்த கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு அழுத்தம் கொடுத்தமையின் ஊடாக 'ஊழல்' எனும் குற்றத்தைப் புரிந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனூடாக பிரதிவாதிக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும் இவ்வழக்கில் சாட்சிகளாக 13 நபர்கள் பெயரிடப்பட்டுள்ளதுடன், வழக்குப்பொருட்களாக 25 ஆவணங்களும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா...

2026-09-09 05:55:13
news-image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க - இந்திய...

2026-09-09 05:50:04
news-image

முக்கிய வழக்கு விசாரணைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்...

2026-09-09 05:43:04
news-image

மனிதகுலத்திற்கு எதிராக நடைபெற்ற குற்றங்களுக்கு காரணமான...

2026-09-09 05:31:39
news-image

ஊடக ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கும் முயற்சிகள் ஜனநாயகத்துக்கு...

2026-09-09 05:28:23
news-image

இரவு நேரங்களில் வயல்களுக்கு தீ மூட்டப்படுவதால்...

2026-09-09 05:09:14
news-image

தனமல்வில பகுதியிலும் துப்பாக்கிச் சூடு -...

2026-09-09 05:06:48
news-image

உயிர்த்த ஞாயிறு வழக்கு: சட்டத்தரணிகளின் உதவியின்றி...

2026-09-09 04:48:33
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தம்: ஜனாதிபதியின் கூற்றில்...

2026-09-08 14:55:10