செம்மணி புதைகுழி அகழ்வின் போது, என்புக்கூடென்றின் இடுப்பு பகுதியில் இருந்து தாயத்து ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், ஒரு ரூபாய் நாணய குற்றி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் 103 ஆவது நாள் அகழ்வு பணிகள் திங்கட்கிழமை (11) முன்னெடுப்பட்டன.
முதலாம் , இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தில் இதுவரையிலான 103 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 539 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 524 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 49ஆவது நாளான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 5 குழந்தைகளுடைய என்புக்கூடுகள் உட்பட 15 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 11 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், என்புக் கூடொன்றின் இடுப்பு பகுதியில் இருந்து தாயத்தும், ஒரு ரூபாய் நாணய குற்றியும் மீட்கப்பட்டுள்ளது.
அதேவேளை புதைகுழிக்கு அருகில் எழுமாறாக தோண்டப்பட்ட இரு சோதனைக்குழிகளில் இருந்தும் என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM