ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இந்தியாவை துவம்சம் செய்தது இலங்கை: ஆனால், தவறுகளைத் தவிர்க்க வேண்டும்

Published By: Vishnu

11 Aug, 2026 | 08:03 PM
image

(நெவில் அன்தனி)

ஹொங்கொங் காய் டெக் ஸ்போர்ட்ஸ அரினா விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் கிண்ணப் பிரிவு போட்டியில் இந்தியாவை 100 - 34 என்ற கோல்கள் வித்தியாசத்தில் துவம்சம் செய்து இலங்கை அபார வெற்றியீட்டியது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அரை இறுதியில் விளையாடுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை வெற்றிபெற்ற போதிலும் முதல் இரண்டு ஆட்ட நேர பகுதிகளில் இலங்கை வீராங்கனைகள் தவறுகள் இழைத்ததை அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக துலங்கி வன்னித்திலக்க, கொல் வாயிலில் 12 முயற்சிகளில் 7 கோல் வாய்ப்புகளைக் கோட்டை விட்டார். கடந்த போட்டிகளில் மத்திய களத்தல் எண்ணற்ற தவறுகளை இழந்து இம்முறை கோல் அட்டாக் வீராங்கனையாக விளையாடியபோதிலும் அவரால் திறமையை வெளிப்படுத்த முடியவில்லை.

எனவே அவருக்கு மத்தியஸ்தர் சொமித்த டி அல்விஸும் அணி முகாமைத்துத்தினரும் சிறந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

இளம் வீராங்கனைகளான பாஷி உடகெதர 29 முயற்சிகளில் 28 கோல்களையும் ரஷ்மி பெரேரா 23 முயற்சிகளில் 28 கோல்களையும் போட்டனர். இவர்கள் இருவரும் கடைசி இரண்டு ஆட்ட நேர பகுதிகளில் விளையாடினர்.

அணித் தலைவி திசலா அல்கம முதல் இரண்டு ஆட்டநேர பகுதிகளில் விளையாடி 50 முயற்சிகளில் 49 கோல்களைப் புகுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோல்வியே காணாத அணிகள் மோதிய சுப்பர்...

2026-09-09 00:16:13
news-image

இமாம், ரிஸ்வான் தொடர்பான தகவல்கள் வெளியானதை...

2026-09-08 15:48:04
news-image

22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவது உறுதி –...

2026-09-07 21:29:19
news-image

தோல்வி அடையாத அணிகளான அப்கன்ட்றி லயன்ஸ்,...

2026-09-07 20:29:17
news-image

நியூ யங்ஸுக்கு எதிராக ஏகப்பட்ட கோல்களைத்...

2026-09-07 20:19:26
news-image

சுவிஸ் கராத்தே லீக்: இத்தோசுக்காய் கழக...

2026-09-07 16:25:36
news-image

சுப்பர் சிக்ஸுக்கு செல்ல சீ ஹோக்ஸ்...

2026-09-07 15:29:09
news-image

20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாணில்...

2026-09-07 13:12:09
news-image

ஹர்ஷித்தாவின் நிதானமான துடுப்பாட்டம் இலங்கையின் அரை...

2026-09-07 09:05:46
news-image

ரட்னம் கழகத்தை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ்...

2026-09-07 15:06:57
news-image

மத்தியஸ்தரின் தவறான தீர்ப்புகளுக்கு மத்தியில் டிபெண்டர்ஸ்...

2026-09-06 15:08:03
news-image

டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ருமேஷ்...

2026-09-06 10:39:58