(நெவில் அன்தனி)
சுப்பர் லீக் சம்பியன்ஷிப்பின் நடப்பு பருவத்தில் முதல் தடவையாக பார்வையாளர்களை 90 நிமிடங்களும் பரபரப்பின் உச்சத்திற்கே இட்டுச் சென்ற கால்பந்தாட்டப் போட்டியில் டிபெண்டர்ஸ் எவ்.சி.யை 2 - 1 என்ற இறுக்கமான கோல்கள் வித்தியாசத்தில் நாவலப்பிட்டி அப்கன்ட்றி லயன்ஸ் கழகம் இறுக்கமான வெற்றிகொண்டது.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இந்தப் போட்டியில் டிபெண்டர்ஸ் எவ்.சி. முதல் தடவையாக தனது பிரதான வீரர்களுடன் விளையாடியது.
இந்தியாவில் நடைபெற்ற கால்பந்தாட்டத் தொடர் ஒன்றில் டிபெண்டர்ஸ் எவ்.சி. பங்குபற்றியதால் முதல் நிலை வீரர்கள் கடந்த மூன்று வாரங்களாக சுப்பர் லீக்கில் விளையாடவில்லை.

சில தினங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய டிபெண்டர்ஸ் எவ்.சி. அணியின் முதல் நிலை வீரர்கள் நேற்றைய போட்டியில் விளையாடி அப்கன்ட்றி லயன்ஸ் அணிக்கு கடும் சோதனையைக் கொடுத்தனர்.
எனினும் போட்டியின் 22ஆவது நிமிடத்தில் டிபெண்டர்ஸ் அணித் தலைவர் சத்துரங்க மதுஷான் பந்தை சரியாக கட்டுப்படுத்த தவறியதை நன்கு பயன்படுத்திக்கொண்ட அப்கன்ட்றி லயன்ஸ் வீரர் நவீன் ஜூட், பந்தை சிறிது தூரம் நகர்த்திச் சென்று தனது அணியின் முதலாவது கோலைப் புகுத்தினார்.

பத்து நிமிடங்கள் கழித்து அப்கன்ட்றி லயன்ஸ் அணிக்கு கோல் போடுவதற்கான வாய்ப்பு ஒன்று உருவானது. அந்த சந்தர்ப்த்தில் டிபெண்டர்ஸ் வீரர் ஒருவர் தனது பெனல்டி எல்லைக்குள் வைத்து பந்தை கையால் தட்டியதால் எதிரணிக்கு பெனல்டி வழங்கப்பட்டது.
ஆனால், பெஞ்சமின் யோர்க் பலமாக உதைத்த பந்து கோல்காப்பின் குறுக்கு கம்பத்தில் பட்டு வெளியே சென்றது.
இதனைத் தொடர்ந்து அப்கன்ட்றி லயன்ஸ் அணிக்கு கிடைத்த சில வாய்ப்புகள் இலக்கு தவறின.
அதேவேளை, டிபெண்டர்ஸ் அணியின் முன்கள வீரர்களின் அசிரத்தை காரணமாக கோல் நிலையை சமப்படுத்த முடியாமல் போனது.
இடைவேளைக்குப் பின்னர் சுமார் 15 நிமிடங்கள் அப்கன்ட்றி லயன்ஸ் திறமையாக விளையாடிக்கொண்டிருந்தது. அதன் பின்னர் அவ்வணியினர் தடுத்தாடும் உத்தியில் இறங்கியதால் டிபெண்டர்ஸ் அணி வீரர்கள் அப்கன்ட்றி லயன்ஸ் அணியின் கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் இருந்தனர்.
எவ்வாறாயினும் 50ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக களம் நுழைந்த ஸர்வான் ஜொஹார், 78ஆவது நிமிடத்தில் மத்திய களத்திலிருந்து தரையோடு முன்னோக்கி பரிமாறிய பந்தை பெஞ்சமின் யோர்க், திறமையாகக் கட்டுப்படுத்தி சிறிது தூரம் நகர்த்திச் சென்று அப்கன்ட்றி லயன்ஸின் இரண்டாவது கோலை போட்டு அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.
போட்டியின் உபாதையீடு நேரத்தில் அப்கன்ட்றி லயன்ஸின் பின்கள வீரர் டக்கோஸ்டா எம்ப்பென் இழைத்த தவறால் அவரிடம் இருந்து பந்தை தட்டிப்பறித்த டிபெண்டர்ஸ் அணியின் மாற்றுவீரர் மொஹமத் ஆதிப், மிகவும் இலகுவான கோல் ஒன்றைப் போட்டார்.
இது அப்கன்ட்றி லயன்ஸ் அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், சற்று நேரத்தில் ஆட்டம் முடிவுக்கு வந்ததால் அவ்வணி ஆறுதல் அடைந்தது.
இப் போட்டியில் அப்கன்ட்றி லயன்ஸ் கோல்காப்பாளர் கவீஷ் லக்ஷான் மிகத் திறமையாக செயற்பட்டு குறைந்தது 3 கோல்களைத் தடுத்து நிறுத்தி தனது அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM