(இராஜதுரை ஹஷான்)
கிராம சேவை உத்தியோகத்தர்கள் உட்பட அனைத்து அரச அதிகாரிகளுக்கும் அடிப்படைச் சம்பளத்திற்குப் பொருத்தமான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. 2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாகவும் அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கிராம சேவை உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த 2025 ஆம் ஆண்டிலும் இந்த ஆண்டிலும் அரச அதிகாரிகளுக்கு அடிப்படைச் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.2027 ஆம் ஆண்டிலும் அடிப்படைச் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும்.
பொருளாதார மீட்சிக்கு மத்தியில் அரச வருமானம் ஒப்பீட்டளவில் உயர்வடைந்துள்ளது. அதில் கணிசமான பகுதி அரச அதிகாரிகள் மற்றும் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக ஒதுக்கப்படுவது. எவருக்கேனும் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் இருப்பின் சம்பளக் ஆணைக்குழுவிடம் கோரிக்கைகளை முன்வைக்க முடியும்.
அரசாங்கம் அடிப்படைச் சம்பளத்தை உயர் மட்டத்தில் அதிகரித்துள்ளது. 2025 ஏப்ரலில் அதிகரிக்கப்பட்டது, 2026 இல் அதிகரிக்கப்பட்டது, 2027 ஆம் ஆண்டும் அதிகரிக்கப்படவுள்ளது. இன்னும் சில மாதங்களின் பின்னர் அனைத்து அரச ஊழியர்களுக்கும் மேலும் ஒரு அடிப்படைச் சம்பள அதிகரிப்பு கிடைக்கவுள்ளது. அது வேண்டாம் என்று கூறிவிட்டா இந்தக் கொடுப்பனவைக் கேட்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
பொருளாதார நிலைமைக்கு ஏற்ப அந்த அடிப்படைச் சம்பளத்திற்கு வழங்கக்கூடிய கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. மிகச் சிறந்த பொருளாதார நிலையில் இருந்து நாட்டை பொறுப்பேற்கவில்லை. பொருளாதாரம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, வருமானம் திரட்டப்பட்டு வருகிறது. அந்த வருமானத்தில் கணிசமான ஒரு பகுதி அரச அதிகாரிகள் மற்றும் அரச ஊழியர்களுக்குச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
எவருக்கேனும் தமது கொடுப்பனவுகள் அல்லது சம்பளம் தொடர்பாகப் பிரச்சினை இருந்தால், அதற்காகவே சம்பளக் ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் தமது கருத்துக்களை முன்வைக்கலாம் .மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் இவ்வாறான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM